காஃபி  தினம் 2023:


ஏ லாட் மோர் கேன் ஹேப்பன் ஓவர் காஃபி... இது ஒரு பிரபல காபி செயின் ரெஸ்ட்ரான்ட்டின் டேக் லைன். இது ஒரு வகையில் உண்மையும் கூட. தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி, புதிய நட்பு, காதல் என இப்படி பல தருணங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி தான். உலகம் முழுவதுமே காஃபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட காஃபி இளைஞர்களின் விருப்ப பானமாகவும் இருக்கிறது. காலையில் ஒரு கப் காஃபியின் நறுமனத்துடன் எழுந்திருப்பது முதல்  வேலையில் சில கப் காஃபி சாப்பிடுவது வரை, இது பலரின் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. 


அக்டோபர் 1(இன்று) சர்வதேச காஃபி தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் பலரும் குறைந்தது ஒருவேளையாவது காப்பியை அருந்துகிறார்கள். எத்தியோப்பியா நாட்டில் காஃபா (Kaffa) இந்த இடத்தில் முதன் முதலாக காப்பிச்செடி தோன்றியதாக நம்பப்படுகிறது. காஃபி  செடியின், சிகப்பான பழங்களில் இருந்து கிடைக்கும் கொட்டையை கொண்டு, வறுத்து  நீருடன் கொதிக்க வைத்து நேரடியாகவோ அல்லது பாலுடன் கலந்து காஃபியானது தயாரிக்கப்படுகிறது. இப்படி உலகம் முழுமைக்கும் சுவையின் காரணமாக பரவி இருக்கும் காஃபியில் இருக்கும் சில வகைகளை காணலாம்.


பிளாக் காஃபி:


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொத்திக்க வைக்க வேண்டும். பின்னர், கொதிக்கும்போது, காஃபி பவுண்டரை அதில் கொட்ட வேண்டும். பின்னர், 2 நிமிடம் கழித்து தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். 


ஃபில்டர் காஃபி:


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், விரும்பப்படும் இது தான். முதலில் பாலை நன்றாக கொதிக்கவைத்து, அதன் பச்சை மனம் போன பிறகு, தேவையான அளவு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காஃபி பொடியை, பில்டரில் போட்டு, அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டால், காபியுடன் சுடுநீர் கலந்து, சிறிது நேரத்தில், பில்டரின் அடியில் இருக்கும் பாத்திரத்தில் காஃபி டிக்காக்ஷன் சேர்ந்திருக்கும். சூடான பாலில், தேவையான அளவு காஃபி டிகாஷனை கலந்தால், சுவையான பில்டர் காஃபி தயாராகிவிடும். இதில் தேவைப்படுவோர் சர்க்கரையை சேர்த்து அருந்தலாம்.


மல்லி காஃபி:


முதலில் காஃபிக்கு தேவையான சுக்கு, மல்லி, மிளகு, சீரகத்தை எடுத்து பொடித்து கொள்ளவும். பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சுக்கு, மல்லி, மிளகு மற்றும் சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும். பின்னர், அதனை ஒரு தட்டில் கொட்டி சற்று நேரம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைக்க வேண்டும்.  பின்னர், ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி  இரண்டு டீஸ்பூன் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும், அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து சூடாகக் குடிக்கலாம். பெரியவர்கள் இனிப்பு சேர்க்காமலே கூட குடிக்கலாம்.