பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் மொத்தம் 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், தென் கொரியாவின் ஹியுஞ்சோ யூ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தப் பதக்கத்தின் மூலம் ஆசிய விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 11 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலத்துடன் மொத்தம் 41 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தில் உள்ளது. 

9வது நாளான இன்று போட்டிகள் தொடங்கிய சிறுது நேரத்தில் இந்திய அணியின் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப் அணி தங்கப்பதக்கத்தையும், இதையடுத்து ராஜேஸ்வரி குமாரி, ப்ரீத்தி ரஜக், மனிஷா கீர் அடங்கிய மகளிர் ட்ராப் அணி  வெள்ளிப் பதக்கத்தை சேர்த்தது. ஹாங்சோ விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் மூலம் இந்தியா பெற்ற 20வது பதக்கம் இதுவாகும். அதேபோல், பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய அணியின் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 

ஆனால் இன்று முதல் தங்கம் ஜொரவர் சிங் சந்து, கினான் டேரியஸ் சென்னை மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோரின் குழு இணைந்த  ட்ராப் அணியின் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளது. 

பதக்கப்பட்டியல் 

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 115 70 36 221
2 ஜப்பான் 29 38 39 106
3 கொரிய குடியரசு 29 31 56 116
4 இந்தியா 11 16 14 41
5 உஸ்பெகிஸ்தான் 10 11 16 37
6 தாய்லாந்து 10 5 14 29
7 சீன தைபே 8 10 10 28
8 ஹாங்காங் (சீனா) 5 15 18 38
9 DPR கொரியா 5 7 4 16
10 இந்தோனேசியா 4 3 11 18