வெயில்காலம் முடிந்து அடுத்த பருவக்காலம் மாறத் தொடங்கியுள்ளது. 'சட்டென மாறுது வானிலை' என்பதற்கு ஏற்ப நேற்று வெயில் இன்று மழை என வானிலையும் மாறிவிட்டது. எதிர்வரும் மழைக்காலத்தில் டீ, பஜ்ஜி, இளையராஜா என்ற வழக்கமான கூட்டணிக்கு விடுமுறை அளித்து சில சூப் வகைகளை குடித்து பார்க்கலாம் என்று தோன்றுகிறதா? வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான எளிய 5 வெஜ் சூப் வகைகள் இதோ .. செய்து பார்த்து வரும் மழைக்காலத்தை கடத்துங்கள்...


சூப் மழைக்கு இதமானது மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. மழைக்காலங்களில் ஏற்படும் வைரஸ் நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த சூப் வகைகள் உதவும்.


1.கேரட் இஞ்சி சூப்:
கேரட், இஞ்சி கூட்டணி மிகவும் சுவையான ஆரோக்கியமான சூப் வகை.
இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது நல்ல செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.




2.பூசணி சூப்:


 பூசணி சூப் தயாரிப்பது எளிதானது. அதேவேளையில் ஆரோக்கியமானது. இந்த சூப்பில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதால் மழைக்காலத்திற்கு தேவையானது.


வந்துவிட்டது மழைக்காலம்.. ஆரோக்கியத்தில் கவனம் - என்னென்ன சாப்பிடலாம்?


3.காய்கறி கலவை சூப்:


பல வகையான காய்கறிகளை ஒன்றுசேர்த்து வைக்கப்படும் சூப் உடல் நலத்திற்கு மிகுந்த ஆரோக்கியமானது. கேரட், பிரஞ்சு பீன்ஸ், தக்காளி மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகளைப் பயன்படுத்தி வைக்கப்படும் சூப், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. தக்காளியில் உள்ள விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.




4.பச்சை பருப்பு மற்றும் கிவி


உங்களுக்கு கிவியின் இனிப்பு விருப்பம் என்றால், இந்த சூப் உங்களுக்கு பிடிக்கும்.  தேங்காய் க்ரீம், கிவி, பச்சை பருப்பு போன்றவற்றின் சுவையில்  இந்த சூப் உங்களை மயக்கும். விட்டமின் சி, நீர்ச்சத்துகொண்ட கிவி நோயெதிர்ப்பு சக்தி தூண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்களிலும் நிறைந்துள்ளதால் நோய் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.


5. தக்காளி மிளகு சூப்


நம் ஊரில் செய்து சாப்பிடும் தக்காளி ரசமே சூப் வகைதான். மழைக்காலத்திற்கு ஏற்றதாக உள்ளது தக்காளி மிளகு சூப். எளிதாக செய்துவிடும் சூப் என்பதால் அடிக்கடி இந்த தக்காளி-மிளகு சூப்பை அருந்தலாம். தக்காளியில் பொட்டாசியம், விட்டமின் பி, விட்டமின் இ அதிகம் இருப்பதால் உடல் பலமாகிறது. இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கிறது.


வெளியே போக முடியலையா? வீட்டிலேயே மேனிகியூர் செய்யலாம்!