பருவ மழை காலம் தொடங்கி விட்டது. தொற்று நோய்கள் அதிகம் பரவ கூடியது. பள்ளி தொடங்க இருக்கும் நிலையில், தொற்று நோய்கள் பற்றிய அச்சமும் சேர்ந்து வரும். குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் தான். குழந்தைகள் எப்போதும் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை தான் செய்வார்கள். அதனால் நன்மையா தீமையா என்பதை அவர்களுக்கு அலசி ஆராய தெரியாது. பெற்றோர்கள் தான், முழு கவனம் எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள், அவர்களின் பழக்க வழக்கம் அனைத்தும், அருகில் இருந்து கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் மிகவும் பொதுவானது. இது பெரும்பாலும் இந்த குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவ கூடியது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இந்த தொந்தரவால் பாதிக்கப்படுகின்றனர். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, மழை காலத்தில் மிகவும் கவனமுடன் இருப்பதும் அவசியம்.
குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டார்கள், காய்கள் சாப்பிட மாட்டார்கள் என சொல்வது, ஒரு பக்கம் பேஷனாக ஆகி விட்டது. பழங்கள், காய்கள், கீரைகள் ஆகியவற்றை கொடுத்து பழக்க வேண்டும். வைட்டமின் சி, இரும்பு சத்து, வைட்டமின் டி, ஏ, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை எடுத்து கொள்ள வேண்டும். அன்றாடம் உணவில் பழம், காய் மற்றும் கீரை தினம் எடுத்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்துகள், நிறைந்த உணவு அவசியம். பாசிப்பயறு, நிலக்கடலை, ராஜ்மா, போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். தினம் அரை மணி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நோயெதிர்ப்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
உணவில் அடிக்கடி துளசி, ஆடாதொடை , இஞ்சி, அதிமதுரம் போன்ற மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதியுங்கள். வெயிலில் நிற்பதும், அவர்களுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துகள் கிடைக்கும். அதனால் அவர்கள், வெளியில் விளையாட அனுமதியுங்கள்
அதிக செயற்கை இனிப்புள்ள உணவுகளை எடுத்து கொள்வது, சர்க்கரை, சாக்லேட் மிட்டாய்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்காதீர்கள். இது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவதுடன், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து வரும்.