சில பொருட்கள் ‘பிராண்ட்’ என்ற ஒன்றுக்காக அதிக விலை இருக்கும். என்னது இதெல்லாம் சந்தையில குறைந்த விலைல கிடைக்குமே என்று நாம் சொல்லியிருப்போம். அதன் விலைக்கு காரணம், பொருளின் தரம் மட்டுமல்ல. அது தாங்கி நிற்கும் பிராண்ட் தான். அப்படி பேசுப் பொருளாகியிருக்கிறது, செருப்பு.
kaftan உடை ஒன்று 2.56 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைன் வணிகத்தில் இப்படி சில செய்திகளை நாம் கடந்து வருவோம். Hugo Boss என்ற நிறுவனம் நீல நிற செருப்பு ஒன்றை ரூ.8,990 விற்பனை செய்வது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. என்னது, பாத்ரூம் செப்பலில் விலை எட்டாயிரமா? பிராண்ட் ஆக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? அதுவும் இந்த செருப்புக்கு 54 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ஃபிலிப் ஃபாலாப் ஸ்லிப்பர்ஸ் (flip-flop slippers) என்று சொல்லக் கூடிய செருப்புக்கு இந்த விலையா என்று டிவிட்டரில் பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் நீல நிற செருப்புக்கு மாதாந்திர கடனும் வழங்குகிறது. EMI-வசதியுடன் எட்டாயிரம் ரூபாய்க்கு சிலிப்பர் விற்பனை செய்வதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாத EMI ரூ. 500. ஆத்தி! அப்போ, செருப்பின் உண்னையான விலை எவ்வளவுன்னு கேட்கிறீங்கள?
நீல நிற ஸ்லிப்பரின் விலை வெறும் 19,500 ரூபாய்தான். ஒரு செருப்பின் விலை 19 ஆயிரமா? பிராண்டட் என்பதால் இதெல்லாம் ரொம்பவே ஓவர் என்று பலரும் தங்கள் மனத்தில் உள்ளதை புலம்பி வருகிறார்கள்.
இந்த காலணிகளை வைத்து பலரும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர். பிராண்ட் செப்பல்னு வாங்கிறதுக்கு பதிலா அந்த விலைல பல அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டு போயிடலாம்ன்னு டிவிட்டரில் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதேபோல, அமேசான் நிறுவனத்தில் பிளாஸ்டிக் வாலி ஒன்று ரூ.25,999 விற்பனை செய்யப்பட்டதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் வீட்டு உயயோக வாலி 28 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனைக்கு என்று பகிரப்பட்ட தகவல் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.
மேலும் வாசிக்க...
10 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மும்பைக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்
TN Rain Alert: தமிழ்நாட்டில் தீபாவளிவரை மழைதான்... - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Indonesia Dome collapses: இந்தோனேசியா: திடீர் தீ விபத்து; இடிந்து விழுந்த மசூதி கோபுரம் - வீடியோ..