இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டு மக்கள் தங்கள் , வெள்ளி , ஆடைகள், பரிசுப்பொருட்கள் என அனைத்தையும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. எனவே உங்களுள் யாருக்கேனும் தங்கம் வாங்கும் எண்ணம் இருந்தால் , போன் பே செயலி வழங்கும் சூப்பர் ஆஃபரை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கிக்கொள்ளலாம்.




இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , கோல்டன் டேஸ் என்னும் ஆஃபரை PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை PhonePe செயலியை பயன்படுத்தி வாங்கினால் தங்கம் மீது ரூ.2,500 மற்றும் வெள்ளி மீது ரூ.500 வரை தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதற்கான ஒரு நல்ல நேரம் என்பதால், ஃபோன்பே அதன் பயனர்களுக்கு ரூ. 1,000 அல்லது அதற்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு அற்புதமான தள்ளுபடியை வழங்கும்" என கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 99.99 சதவீதம் தூய்மையான 24K தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கலாம் என PhonePe தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தங்க நாணயம் வாங்குவதற்கும் ஒரு தூய்மை சான்றிதழ் வழங்கப்படுகிறது.  இந்த ஆஃபரில் காப்புரிமை செய்யப்பட்ட உயர்தர தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பார்கள்  வாங்குபவர்களுக்கு வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வரையில் இந்த  கோல்டன் டேஸ் ஆஃபரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


எப்படி  PhonePe  மூலம் தங்கம் வாங்கலாம் ?



  • முதலில் PhonePe முகப்புப் பக்கத்தின் கீழே உள்ள ”wealth” என்னும் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  • அடுத்ததாக Gold/Silver என்னும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள்  தங்கம் அல்லது வெள்ளி எதை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும்.

  • 'Start Accumulating' or 'Buy More Gold' என்னும் வசதி மூலம் தங்கம் வாங்கலாம். நீங்கள் தங்க நாணயங்களை வாங்க விரும்பினால்  அதையும் வாங்கிக்கொள்ளலாம்.

  • தற்போது உங்களின் தொகையை பதிவிட்டு Proceed என கொடுக்க வேண்டும். பின்னர் Proceed to Pay என கொடுத்தால் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும். 

  • போன் பே மூலம் நீங்கள் பணத்திற்கு ஏற்ற தங்கத்தையோ , அல்லது கிராம் கணக்கில் தங்கத்தையோ வாங்க முடியும்