HPV Vaccination: எச்பிவி தடுப்பூசி புற்றுநோய் பாதிப்பை தடுக்க எப்படி உதவுகிறது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


எச்பிவி தடுப்பூசி:


HPV தடுப்பூசி பொதுவாக புற்றுநோயை ஏற்படுத்தும், HPV நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் நீடித்த பாதுகாப்பை வழங்குகிறது. ஒரு நபர் வைரஸ் பாதிப்பிற்குளாவதற்கு முன் செலுத்தப்படும் HPV தடுப்பூசி தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) மிகவும் பொதுவான பாலியல் பரவும் தொற்று (STI) ஆகும். இது பாலியல் உறவு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்று பாதிப்பால் கர்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த தொற்றின் பாதிப்பை தடுக்கும் வகையில் தான், எச்பிவி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பதின்ம வயதினர் உட்பட சுமார் 1.3 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் HPV நோயால் பாதிக்கப்படுகின்றனர். HPV தடுப்பூசி மூலம் உங்கள் குழந்தையை இந்த புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.


தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் வயது:


ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு தரப்பினருக்கும் எச்பிவி தடுப்பூசியை செலுத்தலாம். 11-12 வயதுடைய குழந்தைகள் 6 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் 2 டோஸ் HPV தடுப்பூசியைப் பெற வேண்டும். HPV தடுப்பூசிகளை 9 வயதில் இருந்து கொடுக்கலாம். 15வது பிறந்தநாளுக்கு முன் முதல் டோஸ் கொடுக்கப்பட்டிருந்தால், மொத்தமே 2 டோஸ்கள் மட்டுமே தேவைப்படும்.


5 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில் 2 டோஸ் HPV தடுப்பூசியைப் பெற்ற 9-14 வயது குழந்தைகளுக்கு மூன்றாவது டோஸ் தேவைப்படும். 15 - 26 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3 டோஸ் HPV தடுப்பூசி தேவைப்படுகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் 9-26 வயதுடையவர்களாக இருந்தால் 3 டோஸ்களைப் பெற வேண்டும்.


யாருக்கு எச்பிவி தடுப்பூசி பலனளிக்காது?


 26 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. இந்த வயது வரம்பில் HPV தடுப்பூசி குறைவான பலனை அளிக்கிறது. ஏனெனில் இந்த வயது வரம்பில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே HPV தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒருவேளை தடுப்பூசி செலுத்த விருப்பமிருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.



 தடுப்பூசி பாதுகாப்பானது:



  • HPV தடுப்பூசியானது HPVயால் ஏற்படும் 90% க்கும் அதிகமான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

  • HPV தடுப்பூசி இளம் பெண்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முந்தைய நிகழ்வுகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது

  • HPV தடுப்பூசிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்கும்

  • டீன் ஏஜ் பெண்களில், பெரும்பாலான HPV புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தும் HPV வகைகளின் தொற்றுகள் 88% குறைந்துள்ளன .

  • இளம் வயது பெண்களில், பெரும்பாலான HPV புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் ஏற்படுத்தும் HPV வகைகளின் தொற்றுகள் 81% குறைந்துள்ளன

  • தடுப்பூசி போடப்பட்ட பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் பெரும்பாலும் இணைக்கப்பட்ட HPV வகைகளால் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களின் சதவீதம் 40% குறைந்துள்ளது .


(மேற்குறிப்பிடப்பட்டவை சர்வதேச அளவிலான ஆய்வின் முடிவுகளின் அடிப்படையிலான தரவுகள் ஆகும்)


சாத்தியமான பக்க விளைவுகள்:


HPV தடுப்பூசி பெறும் பலருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை. சிலர் கை வலிப்பது போன்ற லேசான பக்கவிளைவுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதோடு வரும் லேசானவை சில பக்க விளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 



  • ஊசி போடப்பட்ட கையில் வலி, சிவத்தல் அல்லது வீக்கம்

  • காய்ச்சல்

  • தலைச்சுற்றல் அல்லது மயக்கம் (HPV தடுப்பூசி உட்பட ஏதேனும் தடுப்பூசிக்குப் பிறகு மயக்கம் ஏற்படுவது மற்றவர்களை விட இளம் பருவத்தினரிடையே மிகவும் பொதுவானது)

  • தலைவலி அல்லது சோர்வு

  • குமட்டல்

  • தசை அல்லது மூட்டு வலி

  • மயக்கம் மற்றும் 


HPV தொற்றால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு HPV தடுப்பூசி செலுத்துவது மிகவும் அத்தியாவசியமானது ஆகும். அதேநேரம், மருத்துவர்களின் ஆலோசனையின்படியே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.