'நல்ல உறவு’ என்றதும் நம்மில் பலருக்கு நம் பார்ட்னருடனான ஒரு ஆழமான உடலுறவுதான் என தோன்றிப் போகலாம். ஆனால் அதற்கு உரையாடலும் அவசியம். செக்ஸ் என்பது உறவில் ஈசியான பகுதியாகத் தோன்றினாலும், அதற்கும் உறவில் மற்ற எதையும் போல உழைப்பு தேவைப்படுகிறது.


உண்மையில் பாலியல் திருப்தியை வளர்ப்பது என்பது தந்திரமானது.  உங்கள் பார்ட்னர் உங்களை திருப்திப்படுத்தவும், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கவும் ஆசைப்படுகிறார், எனவே அவர்கள் அதற்காக என்ன செய்கிறார்களோ, அது உடலுறவில் எடுபடவில்லை என்பதை சொல்வது அவர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தும்.


எனவே, அதுகுறித்த சில நுண்ணறிவைப் பெறுவதற்கும், செக்ஸ் பற்றிய தயக்கத்தைக் கடந்து பேசுவதற்கான சிறந்த வழிகளைக் கண்டறியவும், சான்றளிக்கப்பட்ட பாலியல் சிகிச்சையாளர், மருத்துவ ஆலோசகர் மற்றும் தி ப்ளேஷர் சென்டரின் நிறுவனர் அலெக்ஸ் ட்ருகுல்ஜா சில வழிகளைக் குறிப்பிடுகிறார்...


"செக்ஸ் எப்பொழுதும் திருப்திகரமாக இருக்க வேண்டும். மேலும் அதற்காக நீங்கள் பெரிதும் மெனக்கெட வேண்டியதில்லை,அது தானாகவே நன்றாக அமைந்துவிடும் என்ற இந்த யோசனையை நாம் நம்புகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது உண்மையில்லை. அதற்கும் உழைப்பு தேவை" என்று அலெக்ஸ் குறிப்பிடுகிறார்.


ஆனால் உண்மையில் சில சமயங்களில் உடலுறவு ஆச்சரியகரமாக இயல்பாக க்ளிக் ஆகிவிடும். நல்ல செக்ஸ் என்பது நம் பார்ட்னரின் விருப்பு வெறுப்புகளை அறிந்து பதிலுக்கு நம்மை செக்ஸில் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. இது கடினமான உரையாடலாக இருந்தாலும், மிகவும் நிறைவான பாலியல் வாழ்க்கை என்பது, அதை உருவாக்குவதில் நீங்கள் உணரக்கூடிய எந்த சங்கடத்தையும் பேசிவிடுவது சிறந்ததாக இருக்கும்.


செக்ஸ் என்பது உடலுறவு மட்டுமல்ல உரையாடலும் கூட. பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதைப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளி. பெண்கள் ஆர்கசம் அதாவது உடலுறவில் உச்சம் அடைவதைப் பெரும்பாலும் போலியாகவே வெளிப்படுத்தும் சூழல் சிற நேரங்களில் அமைந்துவிடுகிறது. இதனை ஆண்கள் விரைவில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் அது வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.


”செக்சுவல் ஃ.பேண்டசியை கொஞ்சம் டிரை பண்ணுங்கள்” என்கிறார் பாலியல் நிபுணர். ”குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு இதில் ஈடுபாடு அதிகம் இருக்கும். ஆம் உங்களது பெட்டில் மட்டும் செக்ஸ் என்பது பலருக்கு போர் ஆகத்தோன்றும். எனவே பார்ட்னரிடம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், கிட்சன் ரொமான்ஸ், டைனிங் டேபிள் செக்ஸ் என வெவ்வேறு இடங்களில் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்” என்கிறார்


ஒப்பீடு வேண்டாமே!. பொதுவாகவே ரிலேஷன்ஷிப்பில் ஒப்பீடு தீங்கானது என்றாலும் செக்ஸ் லைஃபில் அது ஒட்டுமொத்தமாகவே நோ! நோ!.  அடுத்த வீட்டில் இருக்கும் தம்பதிகள் ஒருநாளைக்கு ஐந்து முறைக்கு மேல் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் நாம் சில நாட்களில் ஒரு முறைகூட செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என ஒப்புமைபடுத்தத் தொடங்கிவிட்டால் அது உறவுக்கே விரிசலாக விழும். சொல்லப்போனால் செக்ஸ் என்பது உறவில் ஒரு பகுதிதான்.


மோசமான செக்ஸுக்கு பார்ட்னரில் யார் காரணம் எனக் கண்டுபிடித்துக் குறை காண்பதை விட அத்தகைய மோசமான செக்ஸுக்கு எதிராக இருவரும் சேர்ந்து டீமாக செயல்பட்டு தீர்வு காணலாம். நினைவிருக்கட்டும் எப்போதுமே உறவில் நீ.. நான் அல்ல.. நாம் என்பதுதான் வலு சேர்க்கும்.