"பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" போன்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்". இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பது மட்டுமின்றி லீட் ரோலில் நடித்தும் உள்ளார். பஹத் பாஃசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் மேற்கொள்ள படத்தொகுப்பை செல்வா செய்ய எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர் கே.
படத்தின் ஹீரோ வடிவேலு :
நடிகர் வடிவேலு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் " நாய் சேகர் ரிட்டன்ஸ்". அதனை தொறந்து மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிப்பது உதயநிதி ஸ்டாலின் அல்ல வடிவேலு என்ற ஷாக் செய்தியை ஏற்கனவே வெளியிட்டனர் படக்குழுவினர். மேலும் வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக அழகம்பெருமாள் நடிப்பதாகவும் அவரின் மகனாக பஹத் பாஃசில் எனவும் கூறப்படுகிறது. அரசியல் கதைக்களத்தை வித்தியாசமான கோணத்தில் படப்பிடித்துள்ளார் மாரி செல்வராஜ் என கூறப்படுகிறது. மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று 62வது பிறந்தநாளை கொண்டாடும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, மாமன்னன் படக்குழுவினருடன் தனது பிறந்தநாள் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | T20 World Cup India Squad: அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து... வெறிகொண்ட வேங்கையாக உலகக்கோப்பைக்கு திரும்பிய இந்தியா!
தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.