பாலியல் உறவின் போது ஆணுறை கிழிவது பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக அமையலாம். ஆணுறை கிழிவதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சில டிப்ஸ் ஆணுறை கிழிந்து போவதைத் தடுப்பதாக அமையும்.. 


ஆணுறைகளைக் கிழியாமல் பயன்படுத்துவது எப்படி? இதோ சில டிப்ஸ்... 


1. அதீத தட்ப வெப்ப நிலையில் ஆணுறைகளை வைக்க கூடாது. 


ஆணுறைகளை வைக்கும் இடம் சற்றே குளிர்ந்ததாகவும், இருண்டதாகவும் இருக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளி விழும் இடத்தில் ஆணுறைகளை வைக்க கூடாது. அதே போல, அதிக குளிருள்ள இடங்களில் வைப்பதும் தவறு. அது ஆணுறையின் ரப்பரில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி செயல்படுவதைத் தவிர்க்கும். 


2. எண்ணெய் சார்ந்த லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தக் கூடாது


வேஸ்லின், தேங்காய் எண்ணெய், லோஷன் முதலானவற்றை லூப்ரிகன்ட்களகப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் சார்ந்த லூப்ரிகன்ட்கள் லேடக்ஸ் ஆணுறைகளில் மெல்லியதாக கிழிசலை ஏற்படுத்தலாம். 



3. இரண்டு ஆணுறைகளை ஒன்றாக பயன்படுத்தக் கூடாது.  


குளிர்காலத்தின் போது குளிரில் இருந்து தப்பிக்க ஆடைகளின் மீது மற்றொரு ஆடையை அணிவது சரியாக இருக்கும். ஆனால் அதனையே ஆணுறைகளுக்கும் பொருத்தினால், அது மிகப் பெரிய தவறு. ஆணுறைகள் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தும் தன்மையோடு வடிவமைக்கப்படுபவை. ஒரு ஆணுறையின் மீது மற்றொரு ஆணுறையை அணிந்தால், அது பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வில் ஆணுறை கிழியும் வாய்ப்புகள் அதிகம். 


4. ஆணுறையைச் சரியாக அணிய வேண்டும்


பாலியல் உறவுக்கு முன்பு ஆணுறை அணிந்து பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் ஆணுறையி ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும். அதன் பிறகு, அதன் கீழ்ப்பகுதியை ஒரு கையில் பிடித்து, அதன் முனையை உங்கள் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி, அதனைக் கிள்ளி, ஆணுறையை கீழ் நோக்கி உருட்ட வேண்டும். இதுவே ஆணுறையைச் சரியாக அணியும் முறை.  


5. லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்த வேண்டும்


எப்போதும் ஆணுறையை மட்டும் தனியாக பயன்படுத்துவது சரியானது அல்ல. எனவே லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தாவிட்டால், பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வின் போது ஆணுறை கிழிவது மட்டுமின்றி, உறவு மேற்கொள்பவருக்குக் காயத்தையும் ஏற்படுத்தலாம். 



6. சரியான அளவிலான ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும்


ஆணுறைகளை விலை குறைவாக இருப்பதற்காக மட்டுமே வாங்காமல், உங்களுக்குப் பொருந்தும் ஆணுறையை வாங்க வேண்டும். ஆணுறையின் அளவு மிகவும் முக்கியமானது. சிறியளவிலான ஆணுறைகள் பயன்படுத்துவது நிச்சயம் அது கிழிவதற்கு வழிவகுக்கும். ஆணுறைகள் இறுக்கமாக பொருந்துவதாகவும், நீங்கள் அதனைப் பயன்படுத்தும் போது, சிரமம் தராமலும் இருக்க வேண்டும்.