குழந்தைகள் சிறு வயதில் கொழு கொழு என இருப்பதைப் பார்த்தால் ரசிக்காமல் யாராலும் இருக்க முடியாது. ஆனால் வயதாக வயதாக குண்டாக இருப்பது என்பது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.  இப்படி தான் சிறு வயதிலேயே குண்டாக இருந்து 138 கிலோவில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரேல், தீவிர பயிற்சிக்கு பின்னர் 43 கிலோ எடையினை குறைத்துள்ளார்.

 

 


 

பொறியியல் பட்டதாரியான விவேக் ராஜ் சிங்க் குக்ரேல் அசாம் கேடரின் 2006 பேட்சில் ஐ.பி.எஸ் அதிகாரியானார். பீகார், அசாம் மற்றும் மத்தியப் பிரதேச கேடரில் பணியாற்றியுள்ளார். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், குழந்தைப்பருவத்தில் கொழு கொழுவென இருப்பது இயல்பாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது. மேலும் எனக்கு சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்று எனவும் அதிலும் ஹிந்தியில் ‘கானா ஃபெக்னா நஹி சாஹியே அதாவது உணவினை வீணாக்க கூடாது என்பதனை என்னுடைய குறிக்கோளாக கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார். மேலும் வித விதமான உணவுகளை அதிகப்படியாக உட்கொண்டதால்  எனக்கு உடல் எடை அதிகமானது. இதோடு மட்டுமின்றி என்னுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கூட பாதிக்கிறது என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன் எனவும், மேலும் எடை அதிகரிப்பின் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கான மருந்தினை எடுத்துக்கொள்ள நேரிட்டதாகவும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.



 

மேலும் தேசிய போலீஸ் அகாடமியில் சேர்ந்தபோது 134 கிலோ எடையுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். இங்கு உடல் எடையினை குறைப்பது என்பது ஒரு பெரிய சாதனையாக இருந்தது.  ஆனால்  46 வாரங்கள் பெற்ற கடுமையான பயிற்சிக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியான விவேக் ராஜ் சிங்க் குக்ரேல் 104 கிலோ எடையுடன் வெளியேறியதாகக் கூறியுள்ளார். ஆனாலும் பயிற்சியினை முடிந்துவிட்டு  பீகாரின் கடினமான நக்சல் பகுதிகளில் பணியாற்றிய போது மீண்டும் உடல்  எடை அதிகரித்து தன்னுடைய எடை 138 கிலோ வரை எட்டியதாக கூறியுள்ளார்.  இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் மீண்டும் முறையான பயிற்சியினை தொடங்கி 8-9 கிலோ வரை குறைத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக 130 கிலோவுடன் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

 


 

மேலும் தன்னுடைய வேலையின் காரணமாகவும்  நடக்கத் தொடங்கிய இவர், இதனையே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டுள்ளார். இதன் காரணமாக படிப்படியாக எடை குறைந்து என்னை வலிமையாக்கியது எனவும் இதனையடுத்து கவனத்துடன் உணவினை சாப்பிட ஆரம்பித்ததால் என் உடலின் எடை குறைப்பு மேலும் உயர்ந்தது. இந்த செயல்பாட்டினை தொடர்ந்து மேற்கொண்டதால் தற்போது 43 கிலோ வரை குறைந்துள்ளதாக  பதிவிட்டுள்ளார். உடலில் உயர் ரத்த அழுத்தம் இயல்பானது எனவும், கூடுதல் நன்மையாக, எனது ஓய்வு துடிப்பு விகிதம் 40 பிபிஎம் ( Resting pulse rate is 40 BPM ) வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது என்னை உற்சாகம் அடைய செய்வதாகவும் நெகிழ்ச்சியுடன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.