பீட்ரூட் நிறத்திற்காகவே பெரும்பாலோனோர் விரும்பி  சாப்பிடும் உணவாக இருக்கிறது. பீட்ரூட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகும். குழந்தைகளுக்கு பிடித்த உணவாகவும், வண்ணமயமாக இருப்பதால் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.




பீட்ரூட் சாதம், பீட்ரூட் சட்னி, பீட்ரூட் கீர், பீட்ரூட் சப்பாத்தி பீட்ரூட் ரசம், என பல ரெசிபிகள் இருந்தாலும், இப்போது புதிய இனிப்பான பீட்ரூட் உடன் பீட்ரூட் அல்வா  எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.


பீட்ரூட் அல்வா  செய்வதற்கு தேவையான பொருள்கள்


பீட்ரூட் - 4            


பால் - 1 கிளாஸ்


நெய் - 1 கப்


சர்க்கரை - 3/4 கப்


ஏலக்காய் - 4 ( பொடியாக்கியது )


உளர் பழங்கள் - தேவையான அளவு


செய்முறை -



  • பீட்ரூட் நன்றாக கழுவி, தோல் நீக்கி விட்டு அதில், சிறிதாக சீவி வைத்து கொள்ள வேண்டும்.

  • ஒரு கடாயில், நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். இதனுடன், சீவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதி இருக்கும் நெய் சேர்த்து , மேலும் வதக்கவும்.

  • இதில் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டாம். பீட்ரூட்டில் இருக்கும் தண்ணீர் போதுமானது. காய் முழுமையாக வெந்துவிடும்.

  • இதனுடன் பால் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 5 நிமிடங்கள் பீட்ரூட்டை வதக்க வேண்டும்.

  • பீட்ரூட் மென்மையாக மாறியதும் அதனுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  • இவற்றை 5 -7 நிமிடங்கள் நன்றாக சமைக்க வேண்டும். மேலே உலர்பழங்களை தூவி பீட்ரூட் அல்வா பரிமாறலாம்.




பீட்ரூட் இயற்கையிலே சர்க்கரை சத்து, இனிப்பு நிறைந்த ஒரு காய் ஆகும். இதை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்த உணவாகும். பீட்ரூட்  கிழங்கு வகையில் சேரும். இது இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்க  உதவும். இது நார்சத்து நிறைந்த உணவாகும். மலசிக்கல்




பிரச்சனை  வராமல்  தடுக்கும். இதில்  ஆண்டிபாடிகள் புற்று நோய் வராமல் தடுக்கிறது.  மேலும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு உதவும். மூளை செயல்திறனை மேம்படுத்தும். இது குறைந்த கலோரிகள் கொண்டுள்ளது. உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


சர்க்கரை நோயாளிகள்,  மருத்துவ ஆலோசனைக்கு பிறகு இதை  எடுத்து கொள்ளலாம். இயற்கையிலே இது இனிப்பு சுவை கொண்ட காய் அதனால், இது இரத்தத்தில்  சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.