கொளுத்தும் வெயிலில் சில்லென்று எதையாவது சாப்பிட விரும்புவோம். ப்ரஷ் ஜூஸ், ஐஸ் க்ரீம் தான் முதல் சாய்ஸ் ஆக இருக்கும். ஐஸ் க்ரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பிடிக்கும். ஐஸ் க்ரீம்-ல் பல்வேறு பிளேவர்கள் இருந்தாலும், மேங்கோ பிளேவர் கொஞ்சம் ஸ்பெஷல் தான். மாம்பழத்தோட பிளேவர் பிடிக்காதவங்க இருக்கவே முடியாது. இனி நீங்க ஐஸ் க்ரீம் சாப்டனும்னா கடைக்கு எல்லாம் போக வேண்டாம். வீட்டிலேயே ஐஸ் க்ரீம் செய்து அசத்துங்க. இப்போ நாம மேங்கோ ஐஸ் க்ரீம் எப்படி செய்யுறதுனு தான் பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்
மாம்பழ பல்ப் - 1 1/2 கப்
பால் - 500 மி.லி
சர்க்கரை - 3/4 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
மாம்பழ எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
குல்ஃபிமோட்- 5, ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்- 5
செய்முறை
முதலில் மாம்பழங்களை அலசி விட்டு அதன் தோலை நீக்கி பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மாம்பழ துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து மாம்பழ பல்ப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து, பால் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பௌலில் கார்ன் பிளார் சேர்த்து அதில் சிறிது பால் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனை காய்ச்சிய பாலில் சேர்க்க வேண்டும். நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு, சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் இருந்து சாஸ் பான் ஐ எடுத்து விட வேண்டும்.
பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும். பால் ஆறியதும், மாம்பழ பல்ப் மற்றும் மாம்பழ எசன்ஸ் ஒரு துளி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும் . இந்த கலவையை அப்படியே ஃப்ரீசரில் வைத்துவிட்டு , பின் ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஸ்கூப் வைத்து எடுத்து சின்ன பௌல்களில் வைத்து எடுத்தால் மேங்கோ ஐஸ்க்ரீம் தயார்.
இல்லையென்றால் இந்த மாம்பழ கலவையை குல்பி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து 3 மணி நேரத்திற்கு பின் எடுத்து அதில் ஐஸ் க்ரீம் ஸ்டிக் செருகினால் குல்பி ரெடி. சுவைத்தால் சுவை அபாரமாக இருக்கும்.
மேலும் படிக்க
CM MK Stalin: தமிழ்நாட்டின் உரிமையை கேட்டால் பிரிவினையா? - கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!