கீரை முதலான பச்சைக் காய்கறிகள், வெந்தயம், கடுகு இலைகள் முதலானவை குளிர் காலத்தில் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வெந்தயம் என்பது இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் அப்பகுதிகளில் அன்றாடம் உண்ணப்படும் வெவ்வேறு வகை உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


வெந்தய இலைகளின் ஒரு வகையான `கசூரி மேத்தி’ இந்திய உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குழம்பு, க்ரேவி வகைகளில் கசூரி மேத்தியைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். 


குளிர்காலத்தின் போது கசூர் மேத்தியை அதிகளவில் வாங்கி ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். எனினும், வீட்டிலேயே கசூரி மேத்தி செய்வதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 


வீட்டிலேயே கசூரி மேத்தி செய்வது எப்படி?



1. வீட்டிலேயே கசூரி மேத்தி செய்ய வேண்டும் எனில் பசுமையான வெந்தய இலைகளை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். 


2. வெந்தய இலைகளை அவற்றின் காம்புகளில் இருந்து பிரிக்க வேண்டும். மேலும் காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தவும். 


3. நீங்கள் எடுத்துக் கொண்ட வெந்தய இலைகளை சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.


4. தண்ணீரும், அழுக்குகளும் நீங்கிய பிறகு, இலைகளைக் காய வைக்க வேண்டும். 


5. இலைகளைக் காய வைத்த பிறகு, மைக்ரோவேவ் ஓவனின் ட்ரேவில் இலைகளைச் சமமாகப் பரப்பி வைக்க வேண்டும். 


6. இலைகள் நிரம்பிய ட்ரேவை மைக்ரோவேவ் ஓவனில் அதிக வெப்ப நிலையில் வைத்து சுமார் 3 நிமிடங்களுக்கு சுட வேண்டும்.


7. 3 நிமிடங்களுக்குப் பிறகு, ட்ரேவை வெளியில் எடுத்து, இலைகளைத் திருப்பிவிட வேண்டும். அவற்றை மீண்டும் 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஓவனில் அதிக வெப்ப நிலையில் வைக்க வேண்டும். 



8. 3 நிமிடங்களுக்குப் பிறகு, ஏற்கனவே செய்த அதே செயல்முறையை மீண்டும் 2 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். 


9. இப்போது வெந்தய இலைகளை வெளியில் தனியாக எடுத்து, அவற்றின் சூடு குறையுமாறு வைக்க வேண்டும். சூடு முழுவதுமாகக் குறைந்த பிறகு, இந்த இலைகளைக் கைகளால் நசுக்கி, அவற்றைக் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.


10. இவ்வாறு செய்தால், கசூரி மேத்தியின் வாசனை நீங்காமல் புதியது போலவே இருக்கும்.


கசூரி மேத்தியை மைக்ரோவேவ் ஓவன் இல்லாமலும் செய்யலாம்.


இதனைச் செய்வதற்கு வெந்தய இலைகளை நன்றாகக் கழுவிய பிறகு, செய்தித்தாள் ஒன்றின் மீதி பரப்பி வைக்க வேண்டும். அவை காய்வதற்காக ஃபேன் அடியில் வைப்பது நலம். முழுவதுமாக இலைகள் காய்ந்தவுடன், அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு, அவற்றை உங்கள் கைகளால் நசுக்கி, பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.