இட்லின்னா குழந்தைகள் ஓடிவிடுவார்கள். ஆனால் அதே இட்லியை இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள் அடிக்கடி இட்லி செய்யச் சொல்வார்கள். இந்த ரெசிபிக்குப் பேரு சில்லி இட்லி. இதை ஈவினிங் டிஃபன், இரவு உணவு எப்படி வேண்டும்னாலும் சாப்பிடல்லாம். இதற்கு தேவையான பொருட்கள்:


இட்லி: 4, பெரிய வெங்காயம்: 1, குடைமிளகாய்: தேவையான அளவு, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சிறிதளவு.


செய்முறை:


வானலியில் ரீஃபைன்ட் ஆயில் சற்று அதிகாமகவே ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் குறைவாக ஊற்றினால் இட்லி பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளும். ஆகையால் இட்லி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். 4 இட்லிகளையும் சற்று சிறு துண்டுகளாக, வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை எண்ணெய்யில் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். பொரித்த இட்லிகளை டிஸ்யூ பேப்பர் மீது போட்டு தனியாக வைத்துவிடுங்கள். பின்னர் ஒரு வானலியில் வெறும் இரண்டும் டீச்பூன் மட்டும் எண்ணெய் ஊற்றி அதில் 4 பல் பூண்டை பொடியாக வெட்டி சேர்க்கவும்.


பின்னர் சதுரமாக வெட்டிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். அது முழுதாக வதங்கி விடக்கூடாது. கண்ணாடி பதம் என்பார்கள். அந்த பதம் வந்ததும் அடுத்ததாக கொடை மிளகாயையும் சேர்க்கவும். அதையும் சதுரமாகவே வெட்டிக் கொள்ளவும். அதுவும் கண்ணாடி பதத்தில் வரும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், டொமேட்டோ சாஸ், ஒரு டீ ச்பூன் சோயா சாஸ் சேர்க்கவும். இவற்றை நன்றாக வதக்கவும். இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றினால் செமி கிரேவி போல் வரும். அதில் வறுத்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். பின்னர் சுடச்சுட உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள். இட்லி தான் வேண்டும் அதுவும் இப்படித்தான் வேண்டும் என்பார்கள். 




இதில் ஒரு நன்மை குடை மிளகாயை குழந்தைகளை சாப்பிட வைப்பது சிரமம். ஆனால் இப்படிக் கொடுத்தால் எப்படியும் சாப்பிட்டுவிடுவார்கள். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது.


இதே சில்லி இட்லி ரெசிபியில் கொஞ்சம் வேகவைத்த பட்டானி, துருவிய கேரட், சிறு பூக்களாக உதிர்க்கப்பட்ட ப்ரோகோலி ஆகியனவற்றையும் சேர்க்கலாம். முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம். வெங்காயத் தாழ், மல்லி இழை சேர்க்கலாம். இப்படி மறைமுகமாக குழந்தைகளை காய்கறி சாப்பிட வைக்கலாம். இட்லியும் மீந்து போகாது, காய்கறிகளும் வீணாகாது.


பீட்சா, பர்கரை வரிந்து கட்டி சாப்பிடும் குழந்தைகள் நம்ம உணவு இட்லியை சாப்பிட என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?