Banana Smoothie: ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பழம் ஸ்மூத்தி தயாரிப்பது எப்படி? டிப்ஸ் இதுதான்!

வாழைப்பழம் ஸ்மூத்தி எப்படி ஈசியா தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க..

Continues below advertisement

வாழைப்பழம் எளிதில் மலிவான விலையில் கிடைக்க கூடிய பழம். அனைத்து சீசன்களிலும் கிடைக்க கூடிய பழம். வாழையில், செவ்வாழை, மலை வாழை, கற்பூர வாழை, மட்டி வாழை, நேந்திர வாழை உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும்ம் தனி தனி சுவைகளையும் சத்துக்களையும் கொண்டது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. பசியில் இருக்கும் போது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் போதும் பசி தீர்ந்து விடும். 

Continues below advertisement

வெளியே வெயிலில் சென்று வீட்டுக்கு திரும்பும் போது சில்லென்று ஏதாவது ஒரு பானத்தை குடிக்க விரும்புவோம். அப்படியான நேரங்களில் ரசாயனம் கலந்த ஏதேனும் பானங்களை குடிப்பதை விட இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு உள்ளிட்டவற்றை குடிப்பது, தாகத்தை தணிப்பது மட்டும் அல்லாமல், உடலுக்கும் நல்லது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த வாழைப்பழ ஸ்மூத்தி-யை எப்படி ஈசியா செய்யுறுதுனு தான் இப்போ பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள் 

பழுத்த வாழைப்பழம் - 3 , தேன் - 2 ஸ்பூன், பிஸ்தா-5,  முந்திரி -5,உலர் திராட்சை-10 ,ஐஸ் கட்டிகள்-10,வெண்ணிலா எசன்ஸ்-1 /2 ஸ்பூன்,யோகர்ட் -1 கப் ,ஏலக்காய்த் தூள்-1 சிட்டிகை, உப்பு- 1 சிட்டிகை

 

செய்முறை

முதலில் வாழைப்பழத்தை ஒரே மாதிரியான அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிளெண்டரில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழம், முந்திரி பாதாம், திராட்சை மற்றும் தேன் ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும். 

பின் அதனை ஒரு பௌலில் எடுத்து அதில் யோகர்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஏலக்காய்த் தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது வாழைப்பழ ஸ்மூத்தியை ஒரு கண்ணாடி டம்ளரில்  ஊற்றி அதன் மேல் சில வாழைப்பழ துண்டுகள் மற்றும் பொடித்த பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால் வாழைப்பழ ஸ்மூத்தி தயார். அனைத்து ரக வாழைப்பங்களில் இருக்கும் சத்துக்களையும் பெற அவ்வப்போது வேறு வேறு வகையான வாழைப்பழங்களில் ஸ்மூத்தி தயாரித்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க

Vanniyar Building Recovery: சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான கட்டடம் மீட்பு - தமிழக அரசு அதிரடி

Crime: காலையிலேயே பயங்கரம்: வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்; பத்திரிகையாளரை சரமாரியாக சுட்டுக் கொன்ற கொடூரம்...என்ன நடந்தது?

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola