தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.


இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய,ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.




இதில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, ஓய்வு பெற்ற பேராசிரியர் உள்ளிட்டோர்ர்களுடன் பேர் ஆணையக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 


ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்:



ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலையே இன்னும் தொடர்கிறது.கடந்த 2022ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு,  ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு, ஆளுநர் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.



சட்ட நடவடிக்கைகள்:


ஆன்லைன் சூதாட்ட தடைசட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட  அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளையாடினால்  3 மாதம் சிறை  அல்லது ரூ.5000 அபராதம்  அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். சூதாட்டத்தை விளம்பரம்  செய்பவர்களுக்கு ஒராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். அதே நிறுவனம் மீண்டும் தவறு இழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 


 ஆன்லைன் விளையாட்டுகளை  ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஓய்வுபெற்றவர்  ஆணையத் தலைவராக நியமிக்கப்படுவர்.  ஓய்வு பெற்ற ஐ.ஜி. மற்றும்  தகவல் தொழில்நுட்பத்தில்  நிபுணத்துவம் பெற்றவர்  ஆணைய உறுப்பினர்களாக இருப்பர். ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும்  விளையாட்டு ஆணையத்தின்  உறுப்பினராக இருப்பார். ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணித்து அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை  விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும். -இவ்வாறு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த்து. அதைபோலவே, இன்று அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சாரங்கன், பேராசிரியர் செல்லப்பன் உள்பட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவன அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


யூகங்கள் அடிப்படையிலே தடை - ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதம்


தமிழ்நாடு அரசு வெறும் யூகங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் வாதத்தை முன் வைத்தன. 


ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள், சுய ஒழுங்கு முறையாக பின்பற்றப்படுவதாக தெரிவிக்கபட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை. பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டமே என்ற அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல என கூறியுள்ளனர்.


ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீறினால் தடை செய்யலாம் என தெரிவித்ததை அடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.