எஸ்.பி.சவுத்ரி, வால்டர் வெற்றிவெல், ஆறுச்சாமி போன்ற போலீசார் வாழும் இந்த காலகட்டத்தில் தான், பொன்னம்பலம், ஆனந்த்ராஜ் போன்ற வில்லன் போலீஸ்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறார்கள். அதுவும் சென்னை மாதாவரம் பால்பண்ணை காவல்நிலையமும், சிறுமி பாலியல் வன்கொடுமையும் தடுக்க முடியாத இரட்டை குழந்தையாய் இணைந்துவிட்டது. அது என்ன ஒற்றுமை என்பதை பின்னால் பார்ப்போம், இப்போ ‛துப்பாக்கி’ சதீஷ் விவகாரத்திற்கு வருவோம். ‛கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்துல... உன்னைப் போல இன்னொருத்தன் கிடைக்கவில்லை....’னு துப்பாக்கியில் ஒரு பாட்டு வரும்ல, அப்படி பட்டவர் தான் எஸ்.ஐ., சதீஷ். அவரை போல ஒருவர், கூகுளில் தேடினாலும் கிடைக்கமாட்டார். அதனால் தான் அவரை துப்பாக்கி சதீஷ் என்கிறீர்களா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ‛கன்’னும் என்னோடது தான் பொண்ணும் என்னோடது தான்...’ என, துப்பாக்கியை வைத்துக் கொண்டு போக்கிரி டயலாக் பேசி, ஒரு குடும்பத்தையே சீரழித்தவர் என்பதால், அவருக்கு ரவுடிகளுக்கு வழங்குவதைப் போல் ஒரு பட்டம் தேவைப்பட்டது. அதற்கு ‛துப்பாக்கி’ என்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், அந்த அடைமொழி. சரி வாங்க... துப்பாக்கி சதீஷின் துப்புக்கெட்ட செயலை பார்க்கலாம். 




சென்னை மாதவரம் துணை ஆணையர் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்த எஸ்.ஐ.சதீஷ்குமாரை, மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு பணியை பத்திரமா பாத்துக்கோங்கனு அனுப்பியிருக்காங்க. நியாய தர்மத்தை எடை போட்டு பார்க்க வேண்டியவர், பக்கத்து ரேஷன் கடையில் எடை போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மனதை எடை போட்டிருக்கார். அரிசியும் கல்லும் கலப்பது போல இருவரும், மிக்ஸிங் ஆகியுள்ளனர். பிளாக்கில் விற்கப்படும் சர்க்கரை போல, அவ்வப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் சதீஷ். மண்ணெண்ணெய் போல இந்த விவகாரம் கசிய, ஒரு நாள் பள்ளி சென்று வீடு திரும்பிய அந்த பெண்ணின் 15 வயது மகள், தனது தாயுடன் தனிமையில் இருந்த சதீஷை பார்த்து அதிர்ந்து போனார். ‛அப்பாவிடம் சொல்கிறேன்...’ என, மிரட்டியுள்ளார். அப்போ தான் முதன் முதலில் தனது துப்பாக்கியை எடுத்துள்ளார் சதீஷ். ‛இந்த மேட்டரை வெளியே சொன்ன... உன் தம்பி... உன் அப்பா... எல்லாரையும் சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்...’ என , சினிமா டயலாக்கில் 15 வயது சிறுமியை மிரட்டியுள்ளார். பயந்த சிறுமியும், அமைதியாகிவிட்டார். இனி என்ன... சிறுமிக்கு விசயம் தெரிந்துவிட்டது. இனி எதற்கு மறைந்து வர வேண்டும் என , இஷ்டத்திற்கு வீட்டிற்கு வரத்துவங்கினார் சதீஷ். 




திடீரென காமப்பார்வை சிறுமி பக்கம் திரும்பியுள்ளது. சிறுமியின் தாயிடம், ‛உன்னை வேறு லெவலுக்கு கொண்டு போறேன்....  உன் மகள் எனக்கு வேண்டும்... நீ கேட்பது எல்லாம் தர்றேன்’ என, ஆசை வார்த்தை கூறியுள்ளார் எஸ்.ஐ. சதீஷ். பேராசை பிடித்த அந்த பெண்ணும், அவரது சகோதரியும், எஸ்.ஐ.,யின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பின் சிறுமிக்கு சிறு சிறு பாலியல் சீண்டல்கள் தரத்துவங்கியுள்ளார் சதீஷ். சிறுமிக்கு பிறந்தநாள் வர, அதை எஸ்.ஐ.,யிடம் தெரிவித்த சிறுமியின் தாய், ‛அவளுக்கு ஏதாவது கிப்ட் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுங்க...’ என ‛பேக்கரி’ ஐடியா கொடுத்துள்ளார். அதன் படி பிறந்தநாளில் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்த எஸ்.ஐ., சதீஷ், கேக் வாங்கி வந்து வெட்டச் சொல்லி சர்பிரைஸ் கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, ‛இதெல்லாம் எதுக்கு நீங்க பண்றீங்க...’ என எச்சரித்து அனுப்பியுள்ளார். அதன் பின், சிறுமிக்கு ஐபோன் ஒன்றை கிப்ட் வாங்கி கொடுத்துள்ளார் சதீஷ். அதை வாங்க சிறுமி மறுத்த நிலையில், சிறுமியிடம் எஸ்.ஐ., தகராறு செய்துள்ளார். அவரை சமரசம் செய்த சிறுமியின் தாய், விடுங்க நான் பார்த்துக்கிறேன்.... நீங்க போங்க,’ என, போனை வாங்கி கொண்டு, பேனை போட்டு கூலாக்கியுள்ளார்.  ‛‛கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்...’ என்பதைப் போல சிறுமியின் தாய் கொடுத்த ஆறுதலை நம்பிச் புறப்பட்ட எஸ்.ஐ.,க்கு சிறுமி உடன் டேட்டிங் போக ஆசை வந்துள்ளது. தாயிடம் விவரத்தை கூறியுள்ளார். ‛அதுக்கு ரொம்ப செலவாகுமே...’ என தாய் தலையை சொறிய, ‛இந்த ஒரு லட்சம்... ’ என, தூக்கி போட்டுள்ளார் எஸ்.ஐ., சதீஷ். ‛பட் எனக்கு அந்த டீலிங்...’ பிடிச்சிருந்தது, என்பதைப் போல, பணத்தை சரிபாதியாக பங்கிட்ட சிறுமியின் தாயும், பெரியம்மாவும், பாவத்தையும் பங்கிட்டுக் கொண்டனர். மறுநாள் டேட்டிங் செல்ல, முகத்துக்கு கோட்டிங் போட்டு  ஜம்முனு காக்க காக்க சூர்யா போல காரில் வந்திருக்கிறார் சதீஷ். ‛வாவ் கேன்சம்...’ என அவரை வரவேற்ற, சிறுமியின் தாயும், பெரியம்மாவும், அவருடன் டேட்டிங் செல்லுமாறு சிறுமியை கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அச்சமடைந்த சிறுமி, தாய் செய்யும் பேய் வேலை குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே எஸ்.ஐ.,யை சந்தித்த சிறுமியின் தந்தை, அவரை கண்டித்துள்ளார். அப்போது தனது துப்பாக்கியை மீண்டும் எடுத்த எஸ்.ஐ., சதீஷ், ‛இங்கே பார்... ‛கன்’னும் என்னோடது தான்... உன் பொண்ணும் என்னோடது தான்...’ என்பது போல வசனங்களை பேசி, மகன், மகள், தந்தை என மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து, அவரும் அமைதியானார். அதன் பின், சதீஷின் ஆட்டம் வேற லெவலுக்குச் சென்றுள்ளது. துப்பாக்கியை காட்டினால் தான் இந்த குடும்பம் பயப்படுது, என முடிவு செய்த சதீஷ்,  துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் தரத்துவங்கினார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன சிறுமியின் தந்தை, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.




விசாரணையில் உண்மை தெரியவர, எஸ்.ஐ., சதீஷ்குமார் மற்றும் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியின் பெரியம்மா ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் துவங்கி, ரேஷன் கடையில் சந்தித்து, வீட்டில் சங்கமம் ஆகி, டேட்டிங்கில் டேமேஜ் ஆன எஸ்.ஐ., சதீஷ்குமார், கொரோனா பணியை கவனிக்காமல், முரணா நடந்த காரணத்தால், இப்போ சரணா கதியாய் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 




இப்போது முன்னுரைக்கு வருகிறேன். மாதவரம் காவல் நிலையமும், சிறுமி பாலியல் தொல்லையும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைன்னு சொல்லியிருந்தேனே... இப்படி தான், இதே ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யா வேலை பார்த்த வாசு என்பவர், கடந்த 2018 ல் ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதானார். இப்போது ‛துப்பாக்கி’ சதீஷ் மாட்டிருக்கார். அந்த ‛சுவர்’ என்னும் எத்தனை பலி வாங்குமோ...!