விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு நடுங்கவைக்கும்.. நிராகரிப்புகளுக்கு பயப்பட வைக்கும்.. மேலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது மிகவும் கடிமாக இருக்கும்.. எடுத்துக்காட்டாக சக ஊழியரிடம் பேசுவதற்கும், வெளியில் சென்று பொருட்கள் வாங்குவதற்கும், பொதுவெளியில் பயணம் செய்யவும், வெளியில் சாப்பிட கூட தயக்கத்தையும் ஒரு வித பதற்றத்தையும் ஏற்படுத்தும் விதமான விஷயங்களை எதிர்கொள்கிறீர்களா? இதைப் படிங்க முதல்ல




இதில் இருந்து விடுபட சில எளிமையான வழிமுறைகள் இதோ


• மனநல ஆலோசனை : ஒரு சிறந்த மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்வது சிறந்தது. நமக்கு என்ன பிரச்சனை  இருக்கிறது என்பதை தெளிவாக விளக்குவதற்கு உதவும். இதில் இருந்து நம்மை வெளியில் கொண்டு வரவும், கூச்சம், பயம், பதற்றம் போன்ற அறிகுறிகளில் இருந்து நம்மை முழுமையாக வெளியில் கொண்டு வரவும், உதவும்.


• பதற்றத்தைத் தூண்டும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை ஆராயுங்கள் : எந்த விஷயத்திற்கு பதற்றம் கொள்கிறோம் என்பதை தன்னைத்தானே ஆராய்ந்து அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக பொது வெளியிலோ, அலுவலகத்திலோ உணவு உண்ண செல்லும் போது பயம் அல்லது பதற்றம் கொள்கிறோமா, யாரவது நம்மை பார்த்து ஏதேனும் விமர்சனம் செய்ய போகிறார்கள் என்பதற்காகவா என யோசித்து எழுதிக்கொள்ளுங்கள். பின் அதில் இருந்து வெளிவருவதற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து நமக்கு நாமே ஆலோசனை செய்து கொள்ளலாம்.




• எதிர்மறை எண்ணங்களுக்கு சவால் விடுங்கள் - பொதுவாக பயம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் வருவதை யாராலும் தடுக்க  முடியாது. மாற்ற முடியாது. இது இயல்பாக  வரும். ஆனால் நாம் தொடர்ந்து இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்துவிடக்கூடாது. ஒவ்வொரு முறை இது போன்ற எண்ணங்கள் வரும்போது , சிந்தனையை மாற்றி நேர்மறையாக சிந்திக்க பழகவேண்டும். இது முழுக்க முழுக்க சிந்தனையை சேர்ந்தது.


• நம்பிக்கையான ஒரு நபரிடம் தினம் பேசி பழகுதல் - பொது வெளிகளுக்கு  செல்லும்போது  அவருடன் சேர்ந்து செல்வது, நேர்மறையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வது, தினசரி உரையாடல்கள் நிகழ்த்தி பயத்தையும், கவலையையும் போக்கலாம். உடலை தளர்வு படுத்தும் பயிற்சிகள் -  பயத்தினால் வியர்த்து ,பதற்றமாக படபடப்பாக இருப்பது, தலை வலி, இதயத்துடிப்பு அதிகமாதல்,  ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்து நன்றாக சுவாசிப்பது நல்லது. மூச்சை உள்ளிழுத்து ஒரு 4 விநாடிகள் கழித்து மூச்சை வெளியில் விடவேண்டும். இது போல் ஒரு 10 முறை செய்யவேண்டும். அடுத்து மூச்சை உள்ளிழுக்க ஒரு 7 வினாடிகளுக்கு, வெளியில் விட ஒரு 8 வினாடிகள் என மெதுவாக மூச்சுப்பயிற்சிகள் செய்வது மேற்கண்ட அறிகுறிகளில் இருந்து விடுபட உதவும்.