அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் மீதான சூடு அடங்குவதற்குள், மற்றொரு அதிமுக பிரமுகர் மீதும் இதேபோன்றதொரு புகாரை கொடுக்க ஒரு பெண் தயாராகி வருகிறார்.



மலைக்கோட்டை மாநகரை சேர்ந்த பிரமுகர்தான் அடுத்து சிக்கலில் மாட்டப்போவது. காவல்நிலையம் சென்று தன்னால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு, பஞ்சாயத்து பேசி வருகிறாராம் அந்த ம.கோ.பி. ஆனாலும், மணிகண்டன் மீதான வழக்கில் போலீசார் தீவிரம் காட்டி வருவது, மலைக்கோட்டை பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதால்,  புகார் கொடுத்து, மலைக்கோட்டை பிரமுகர் செய்த கொடுமைகளையெல்லாம் அம்பலப்படுத்திவிடவேண்டும் என்று நினைக்கிறாராம். இனி, தன்னைப்போன்று எந்த பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், என்ன மிரட்டல்கள், எதிர்ப்புகள் வந்தாலும் புகார் கொடுத்துவிட்டு, மீடியாக்களிடம் அவர் பற்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவும் செய்துவிட்டாராம்.



அதற்காக, தனது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள், வழக்கறிஞர் துணையுடன் புகார் கடிதத்தையும், சாந்தினி காட்டியதுபோல புகைப்படங்கள், ஸ்கிரின்ஷாட்களையும் தயார் செய்து வருகிறார். புகாரை திருச்சியிலேயே அளிக்கலாமா அல்லது சென்னைக்கு நேராக வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துவிடலாமா என யோசித்து வரும் அந்த பெண் சொல்லப்போகும் குற்றச்சாட்டால், மலைக்கோட்டை மாநகர் பிரமுகர் கைதாகும் நிலைக்கு கூட செல்லலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கனவே இந்த அதிமுக பிரமுகருக்கும் திமுகவினருக்கும் ஏழாம் பொறுத்தமாக இருக்கும் நிலையில், திமுகவினர் துணையையும் நாடியுள்ளாராம். 


இவர் அளிக்கப்போகும் புகார்களுக்கு பிறகுதான் அமைதியாக, சாந்த சொரூபியாக வலம் வரும் அந்த குணவானின் உண்மைமுகம் தெரியவரும் என்கிறார்கள்