டீ, காஃபி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காஃபி குடித்தால்தான் அந்த நாள் இனிமையாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரையை காணலாம்.


காலை வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்நேகல் தெரிவிக்கும் பரிந்துரைகளை காணலாம். 


“காலையில் எழுந்ததும் பசி உணர்வு எடுக்கும்போது டீ அல்லது காஃபி குடித்தால் அதன் பிறகு எதையும் திருப்தியுடன் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. அந்த நாளும் சுறுசுறுப்பாக இருக்காது. நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும்.” என்று விளக்கம் அளிக்கிறார் ஸ்நேகல்.






காலை வெறும் வயிற்றில் டீ / காஃபி குடிப்பது ஏன் ஆரோக்கியமானது அல்ல, ஏன்?


இது குறித்து விளக்கம் அளிக்கும் ஸ்நேகல்,” காஃபி, டீ ஆகியவற்றில் கஃபைன் இருக்கிறது. இது வயிற்ற்சில் அமில சுரப்பை ஏற்படுத்தும்.  காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது நெஞ்சு எரிச்சல் போன்ற சிலவற்றிற்கு காரணமாக அமையும்.தொடர்ந்து வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிப்பது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.” என்று எச்சரிக்கிறார்.


டீ-யில் உள்ள டானின்ஸ் என்ற வேதிப்பொருள் உணவு பொருட்களில் இருக்கும் சத்துகளை உறிஞ்சும் திறனை குறைத்துவிடும். இதனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கு பதிலாக வேறொன்றை பின்பற்றலாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ் உள்ளிட்டவற்றை முயற்சிக்கலாம். 


காலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடுவது என்பது மிகவும் அவசியமானதாகும்.


செரிமான மண்டலம் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவைகள்



  •  பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

  •  இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது.

  •  புரோபயாடிக் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • உணவில் போதுமான நார்ச்சத்துக்களை, குறிப்பாக தாவர வகை நார்ச்சத்து இருப்பது நல்லது.

  • செரிமான மண்டலம் சீராக செயல்பட சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

  • இஞ்சி, சீரகம், கொத்தமல்லி மற்றும் லவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது செரிமான திறனை மேம்படுத்த உதவும்.

  • உணவு சாப்பிடும் முன் எலுமிச்சை சாறு,  ஒரு சிட்டிகை ராக் சால்ட்,  இஞ்சி,  கலந்து தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.

  • உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவதும் உணவை ஜீரணிக்க உதவுகிறது.

  • காலை உணவு மிக முக்கியமான உணவு. மேலும், இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.