- முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை
- சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மடிக்கணினி கடையின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவன் உள்பட 2 பேர் கைது
- காஞ்சிபரத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களை தொடர்ந்து திருடி வந்த 29 பேர் கொண்ட கும்பல் கைது – பல லட்சம் மதிப்பிலான தொலைத் தொடர்பு சாதனங்கள் பறிமுதல்
- தீபாவளி பண்டிகை; விமான கட்டணங்களில் சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா
- மருது சகோதரர்களின் 223வது நினைவு தினம்; சிவகங்கை மாவட்டத்தில் இன்று மதுக்கடைகள் மூடல்
- கோயம்புத்தூரில் பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து சாலையிலே திடீரென தீப்பிடித்து எரிந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
- திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ரவுடி மிரட்டியதாக தனியார் நிறுவன இயக்குனர் குற்றச்சாட்டு
- கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவம்; பொன்னேரி உள்ளிட்ட ரயில் நிலைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழை; பிலிகுண்டுலுவுக்கு குறைந்த நீர்வரத்து
- சேலம் அருகே பஞ்சுகுடோனில் தீ விபத்து; ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதம்
- டாணா புயல் எதிரொலி; இலங்கை காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
- கனமழை காரணமாக மதுரையில் பல இடங்களில் 2வது நாளாக தேங்கியிருக்கும் மழைநீர் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
- கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு; தென்பண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு
- கோவையில் தீபாவளி பண்டிகைக்காக நள்ளிரவு 1 மணி வரை கடைகளில் விற்பனை செய்ய அனுமதி
Tamilnadu RoundUp: வைத்திலிங்கம் வீட்டில் தொடர் சோதனை! மதுரையில் வடியாத மழைநீர்! தமிழகத்தில் இதுவரை!
சுகுமாறன்
Updated at:
24 Oct 2024 09:45 AM (IST)
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
24 Oct 2024 09:45 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -