ஓட்ஸ், உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது நாம் அறிந்ததே.  இதில் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மாங்கனீசு, பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவைக் குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஓட்ஸ் உப்மா, ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் சத்துமாவு கஞ்சி எல நிறைய செய்யலாம். 


ஓட்ஸ் நன்மைகள்:


தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொளவது உடல்நலனுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா பரிந்துரைக்கிறார்.  ”ஓட்ஸ் எடை குறைக்க உதவுகிறது. தினமும் பழங்களுடன் சாப்பிட்டு வந்தால், அவை பலனளிக்கும். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார். மேலும், உடல் எடை குறைக்க வேண்டாம் என்பவர்களும் ஆரோக்கியத்திற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடலான் என்கிறார் அர்ச்சனா. 


ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் ஃபைபர் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.


ஓட்ஸ் ஸ்மூத்தி


ஸ்ட்ராபெர்ரி,  அவகேடோ அல்லது வாழைப்பழங்கள் போன்ற உங்களுக்கு விருப்பமான எந்தப் பழத்தையும் ஓட்ஸ் உடன் சேர்த்து ஸ்மூத்தி செய்யலாம்.  சாக்லேட் சிரப்புடன் அரைத்த ஓட்மீல் அல்லது ஓட் மாவு சேர்க்கவும். இனிப்புக்கு, தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்க்கவும். அடுத்து, பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது பசும்பால் சேர்த்து கலக்கவும். கூடுதல் ஊட்டச்சத்துக்காகவும்,  உலர் பழங்களை நீங்கள் சேர்க்கலாம். அல்லது நறுக்கிய பேரீச்சம்பழம் மற்றும் சியா விதைகளையும் சேர்க்கலாம். 


உங்களின் வழக்கமான தானிய வகைகளான ஃப்ரூட் லூப்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது சோகோஸ் போன்றவற்றை ஓட்ஸுடன் மாற்றவும். பால் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஆரோக்கியமாக இருக்க , தேன் அல்லது வெல்லம் தூள் சேர்க்கவும். சர்க்கரை வேண்டாம். ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது வாழைப்பழங்கள் போன்ற நறுக்கப்பட்ட பழங்களுடன் இதை சாப்பிடலாம். 


ஓட்ஸ் கிச்சடி


கிச்சடி ஆரோக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில், காய்கறி, தாளிக்க பருப்பு சேர்த்து சமைக்கப்படும்.  சாதாரண ஓட்ஸை எடுத்து, விருப்பமான அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும். நீங்கள் பீன்ஸ், தக்காளி, பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு, கேரட், பெல் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை மற்றும் காளான்களையும் சேர்க்கலாம். ருசியான ஆரோக்கியமான ஸ்பைசி ஓட்ஸ் ரெடி. 


ஓட்ஸ் தோசை:


 நாம் எளிமையாக மற்றும் உடனடியாக காலை சமையலை முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களிடம் உள்ள மீதமுள்ள தோசை மாவோடு தூள் ஓட்ஸினைக் கலந்து தோசை செய்யலாம். இதனுள் மசாலா அல்லது காய்கறிகளை வதக்கிப் போட்டு சேர்த்தும் சமைக்கலாம்.


தேங்காய் ஓட்ஸ்:


 rolled oats-ஐக் கொண்டு தேங்காய் மற்றும் மசாலாப்பொருள்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய துரித காலை உணவு தான் தேங்காய் ஓட்ஸ். தயிருடன் சேர்ந்து இதனைச்சாப்பிடலாம்.


ஓட்ஸ் முட்டை ஆம்லெட்: 


காலை உணவிற்கு முட்டை ஆம்லெட்டுகளை  வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இதேப்போன்று ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் ஊத்தாப்பம், ஓவர்நைட் ஓட்ஸ், காய்கறி ஓட்ஸ் கஞ்சி,  உலர்ந்த பழங்கள் கொண்ட ஓட்ஸ் கஞ்சி, சாக்லேட் ஓட்ஸ்,ஓட்ஸ் கீர் அல்லது ஓட்ஸ் பாயாசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை காலை உணவாக செய்யலாம்.


ஓட்ஸ் நல்லதா?


சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா? நீரிழிவு நோய்க்கு ஓட்ஸை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓட்ஸ் முக்கியமாக உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கவும் உதவுகின்றன." என்கின்றனர்.




ஆரோக்கியமான ஓட்ஸ் சில்லா ரெசிபி இதோ-- Oats Chilla : காலைல சாப்பிடாம ஓடிக்கிட்டே இருக்கீங்களா? பத்து நிமிஷத்தில் செய்யலாம் ஓட்ஸ் சில்லா.. செம்ம ரெசிப்பி இதோ