காலை உணவு என்பது நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான பகுதி. இது நாள் முழுவதும் திறம்பட செயல்படத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நம் உடலை ஆற்றல்மிக்கதாக்க உதவுகிறது. அதனால்தான், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுடன் காலையைத் தொடங்க வல்லுநர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். அது ஒரு ப்ரெஷ்ஷான பழங்களின் கலவையாக இருந்தாலும் சரி, சரியாக சமைத்த ஆம்லெட்டாக இருந்தாலும் சரி, எண்ணெய் இல்லாமல் சமைக்கப்பட்ட ரொட்டியாக இருந்தாலும் சரி, அது ஆரோக்கியமாக இருக்கும் வரை, நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று பொருள். ஆரோக்கியமான காலை உணவுக்கான தேர்வுகளைப் பற்றி பேசுகையில் சில்லா என்னும் ஒருவகை ரெசிபி மிகவும் முக்கியமானது.


சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். ஒரு எனர்ஜெட்டிக்கான  சூடான காலை உணவுக்கு ஏற்ற ஸ்டஃப்டு ஓட்ஸ் சில்லா ரெசிபியை கீழே தந்துள்ளோம்..




சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது, இது புரதங்கள் நிறைந்தது. இந்தக் கடலைமாவு தோசையின் ஆரோக்கியத்தை நீங்கள் அறிய விரும்பினால், இந்த செய்முறையை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்! பெயர் குறிப்பிடுவது போல, இந்த சில்லா ஓட்ஸ் மாவில் செய்யப்படுகிறது. இது ஒரு சுவையான காய்கறி ஸ்டஃப்பிங்குடன் செய்யப்படுகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த காலை உணவாக அமைகிறது. இதில் கூடுதல் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். இந்த சில்லாவை புளிப்பான சட்னியுடன் சேர்த்து அதன் சுவையில் நீங்கள் இளைப்பாறலாம்.






செய்முறையைத் தொடங்க, முதலில், நாம் ஸ்டஃப்பிங்கைத் தயார் செய்ய வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, மஞ்சள் தூள், கரம் மசாலா, கொஞ்சம் வேகவைத்த சோறு ஆகியவற்றுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ற அளவு சேர்க்கவும். சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.


பின்னர் சில்லா கலவைக்கு, ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், பொடித்த ஓட்ஸ், எண்ணெய், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர் நன்றாகக் கலக்கவும். இப்போது ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். சில்லா கலவையை வாணலியில் ஊற்றி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும். சில்லாவில் கொஞ்சம் ஸ்டஃபிங்கை வைத்து, அதை மடித்து, கடாயில் இருந்து எடுக்கவும். ஸ்ஃடப்பட் ஓட்ஸ் சில்லா தயார்!