புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். சிலர் சந்தையில் கிடைக்கும் ரெடிமேட் புரதப் பவுடர்களை வாங்குவதுண்டு. ஆனால் புரதப் பவுடர் அவ்வளவு கையடக்க விலையில் கிடைப்பதில்லை. எனவே புரதப் பவுடரை வாங்கிப் பயன்படுத்த இயலாதவர்கள் வீட்டிலேயே அதனை தயார் செய்து கொள்ளலாம்.


கிராமங்களில் குழந்தைகளுக்கு சத்தான திரவ உணவு ஆரம்பிக்கும் போது பாட்டியோ இல்லை பெரியவர்களோ கம்பு, கேழ்வரகு என பலவகை தானியங்களை சேர்த்து சத்து மாவு கஞ்சி, கூழ் மாவு என தயாரிப்பது உண்டு. 


உடல் எடைக் குறைக்க எடையைக் கூட்ட நோயில் இருந்து மீள என எல்லாவற்றிற்கும் புரதம் தான் தீர்வு. ஆனால் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக் கொள்ளும் விதமும் அளவும் மாறுபடும். அவந்தி தேஷ்பாண்டே என்ற ஊட்டச்சத்து நிபுணர் வீட்டிலேயே புரதப் பவுடர் தயார் செய்வது எப்படி என்று விளக்கியுள்ளார். அவரது யூடியூப் சேனலில் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


உடல் எடை குறைக்க புரதம்:


வீட்டிலேயே எளிதாக புரதப் பவுடர் தயாரிக்கலாம்:


பாதாம் மற்றும் பிஸ்தாவை மிதமான சூட்டில் வறுத்து சேர்த்து அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பூசணி விதை, தர்ப்பூசணி விதை ஆகியனவற்றையும் சேர்த்து அதையும் நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளவும். இதனை ஏற்கனவே அரைத்து வைத்த நட்ஸ் பவுடரில் சேர்த்துக் கொள்ளவும். இதனை இரு பங்காக பிரித்துக் கொள்ளவும். இதனை அடிப்படை பவுடராக வைத்துக் கொண்டு இதில் இரண்டு விதமான ஃப்ளேவரை சேர்க்கலாம்.


கேசர் இலாச்சி புரதப் பவுடர் ரெசிபி:


நீங்கள் தயாரித்துவைத்த புரதப் பவுடரில் ஏலக்காய் பவுடர் மற்றும் குங்குமப்பூ சேர்த்தால் ஒருவகை பானம் கிடைக்கும். அதேபோல் அந்த பவுடரில் சாக்கலேட் கோக்கோ பவுடரை சேர்த்தால் சாக்கலேட் ஃப்ளேவர் கிடைக்கும்.


யூடியூப் லிங்க்:



உடல் வளர்ச்சியடைவதற்கும், குணமடைவதற்கும்  புரதச்சத்து அவசியமானதாகின்றது.பால், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பீன்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றில் அமினோ அமிலங்களாக பிரிக்கப்பட்டு, சிறு குடலினால் உறிஞ்சப்பட, கல்லீரல் தனக்குத் தேவையான அமினோ அமிலங்களைப்  பிரித்து எடுத்துக்கொள்கின்றது.மீதமுள்ளவை சிறுநீராக வெளியேற்றப்படுகின்றது.


சுறுசுறுப்பாக இல்லாத பெரியவர்கள், ஒரு நாளைக்கு தங்கள் எடைக்கு ஏற்ப ஒரு கிலோகிராமுக்கும் சுமார் 0.75 கிராம் புரதத்தை சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றார்கள். சராசரியாக, இது ஆண்களுக்கு 55கிராம் என்றும் பெண்களுக்கு 45கிராம் என்று கணக்கிடப் பட்டிருந்தாலும் இரண்டு உள்ளங்கை அளவிலான இறைச்சி, மீன், டோஃபு, கொட்டைகள் அல்லது பருப்புகள் என்பது தோராயமான கணிப்பு . சரியான புரதச்சத்து கிடைக்காமல் சதைகள் பலவீனமாவதால், முடி உதர்வு, தோல் பிரச்சனை மற்றும் எடை இழப்பு ஏற்படலாம். பெரும்பாலும் உணவு உட்கொள்ளுதல் முறையில் கோளாறு உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற மிக அரிதான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.