காஃபி குடிப்பது சிலருக்கும் மிகவும் பிடிக்கும். காஃபியில் ஏராளமான நல்ல குணங்கள் இருக்கின்றன. அதீத காஃபி சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம் . இது ஒரு புறம் இருக்கட்டும் . காஃபி முக பராமரிப்பில் ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது . காஃபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான சரும செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுகிறது. காஃபி ஃபேஸ் மாஸ்கில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.




பளபளப்பான முகம் :


3 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1/4 கப் காபி பவுடரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்களது முகத்தில் தடவி ., பின்னர் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்துக்கொள்ளுங்கள்.பின்னர் சுத்தமான நீரில் கழுவுங்கள் . இந்த மசாஜ் சருமத்தின் செல்களை எழுப்புகிறது மற்றும் சருமத்திற்கு கதிரியக்க, ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கிறது.


செல்லுலைட் குறைப்பு: 


தோலின் கீழ் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலமும், பொது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், காபியில் உள்ள காஃபின் செல்லுலைட்டைக் குறைக்க உதவுகிறது.




கருவளையம் :


காஃபியில் உள்ள காஃபின் இரத்த நாளங்களின் விரிவாக்கத்திற்கு உதவுகிறது. இது கருவளையத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.காபியில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன, அவை கண்களுக்குக் கீழே உள்ள நிறமாற்றத்தைக் குறைக்க உதவுகின்றன. ஒரு டேபிள் ஸ்பூன் காபி பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், சில துளிகள் விட்டமின் ஈ உள்ளிட்டவற்றை ஒன்றாக கலந்து  கண்களுக்கு கீழே கவனமாக தடவிக்கொள்ளுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிடுங்கள் . இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.


 


பருக்கள் :


காபியில் சிஜிஏக்கள் அதிகமாக இருப்பதால், அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயல்பாகவே இருக்கின்றன.2 டீஸ்பூன் பிரவுன் சர்க்கரை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் மற்றும் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன்  சேர்த்து முகத்தில் தடவி வர பருக்கள் நீங்கும்.


ஆண்டி ஏஜிங்:



வயதான தோற்றத்தையும் முக சுருக்கங்களை போக்கவும் காஃபி உதவியாக இருக்கும். அதற்கு நீங்கள் இந்த பேஸ்டை பயன்படுத்த வேண்டும் . காபி மற்றும் கோகோ பவுடரை ஒரு பேசினில் சேர்த்து, படிப்படியாக பாலையும்  தேன் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டு துளிகள் சேர்த்து கலவையாக்குங்கள் . பிறகு இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, அதை தண்ணீரில் கழுவவும். இந்த கலவை மூன்று நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.