பிரதமர் விடுத்த கோரிக்கையையடுத்து நடிகர் விஜய் தனது வீட்டின் முன்பு தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார். 


 




 


நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 75-வது அமிர்த பெருவிழாவினை கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் இன்று முதல் வரும் 15-வது தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு கேட்டுகொண்டதுடன், சமூகவலைதளங்களில் தங்களது முகப்பு படத்தில் தேசியக் கொடி புகைப்படத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.


அதனைத்தொடர்ந்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது முகப்பு படங்களில் தேசியக்கொடி புகைப்படத்தை வைத்தனர். வீட்டின் முன்பும் தேசியக்கொடியை ஏற்றினர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி நாம் இந்தியனென்று பெருமைகொள்வோம்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா ட்விட்டரில் தனது முகப்பு படத்தில், தேசியக்கொடியை வைத்தார்.