அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது தாக்குதலையடுத்து,  பாஜகவினர் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக, பாஜக-வினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும்  மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






அமைச்சர் மீது தாக்குதல்:


தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜக-வினரும் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜக-வினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 






பின்பு அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது, அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்து அமைச்சர் காரின் மீது காலணியை பாஜகவினர் எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.