குங்குமப்பூவை சரியான முறையில் பிரித்தெடுத்துப் பொடியாக்கி பால் தண்ணீர் கலந்து பருகும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதோடு இதனை பல நாள்களுக்கு உபயோகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. எனவே பெண்கள் கருவுற்றாலே குங்குமப்பூவைத் தேடி கணவர்மார்கள் அலையத் தொடங்குவார்கள். ஆனால் உண்மையில் இது உண்மைதானா? என இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால் குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளைத் தரக்கூடியதாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளைப் பலப்படுத்துவதோடு, திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டவும் பயன்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் மட்டும் தான் விளைவிக்கப்படுகிறது. இவைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக குங்குமப்பூ என்பது குங்குமப்பூவின் மலரிலிருக்கும் மகரந்தத்தைத் தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்த பூக்கள் பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அதிகமாக பூக்கக்கூடும். சுமார் இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ அளவிற்குத் தான் குங்குமப்பூ தயாரிக்க முடியும். மேலும் தரமான குங்குமப்பூ தயாரிக்க வேண்டும் என்றால் அதிக காலம் தேவைப்படுவதால் தான் இந்த பூக்கள் விலையுயர்ந்ததாக உள்ளது.
இப்படி மிகவும் விலையுயர்ந்த குங்குமப்பூ உலகம் முழுவதும் மசாலாப்பொருள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இதனை எந்தவொரு உணவில் சேர்த்தாலும் உணவிற்கு கூடுதல் சுவை மற்றும் நறுமணத்தை வழங்குவதுடன், சகத்திய வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் இது உள்ளது. இதோடு பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை வழங்கும் குங்குமப்பூவைத் திறம்பட மற்றும் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்கான பல வழிமுறைகளை நீங்கள் தேடுகிறீர்களா? இதோ எப்படி இதனைப்பாதுகாத்து வைப்பது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் செஃப் சரண்ஷ் கோய்லா தெரிவித்துள்ள குறிப்புகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
குங்குமப்பூவின் மென்மையான சுவையைப் பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதோ..
முதலில் குங்குமப்பூ இலைகைளை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிதமான தீயிட்டு வறுக்கவும். இல்லாவிடில் 60-90 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் செய்யவும். பின்னர் 2-3 நிமிடங்களுக்கு இதனை அப்படிவே வைத்திருக்க வேண்டும்.
பின்னர் வறுத்த குங்குமப்பூ இலைகள் ஆறியவுடன், அதனை சிறிய உரலில் வைத்து, பொடியாக்வும். அல்லது கைகளைப்பயன்படுத்தி கசக்கிக்கொள்ளலாம்.
இதனையடுத்து குங்குமப்பூ பொடியை சேகரித்து ¼ கப் தண்ணீர், பால் அல்லது உங்களுக்கான விருப்பமானவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.