சென்னை வடக்கு மண்ட இணை ஆணையராக ரம்யா பாரதி ஐபிஎஸ் இருந்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இவரை கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு மண்ட இணை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. அப்போது முதல் தன்னுடைய பணிகளை இவர் சிறப்பாக செய்து வருகிறார். 






இந்நிலையில் சமீபத்தில் இரவு நேரத்தில் தன்னுடைய சென்னை வடக்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அவர் சைக்களில் ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நள்ளிரவில் ஆய்வு செய்துள்ளார். சுமார் அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார். 



அவரின் இந்த ஆய்வு தொடர்பான காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி உள்ளன. இவர் தன்னுட்டைய பயணத்தை வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் தொடங்கி எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்துள்ளார்.அத்துடன்  கோட்டை காவல் நிலையம், எஸ்பிளனேட் காவல்நிலையம், பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், ஆர்.கே நகர் காவல் நிலையம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்களுக்கு சென்று இரவு பணியை ஆய்வு செய்துள்ளதாக தெரிகிறது.


அவரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்விட்டர் மூலம் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






தனது வாழ்த்து செய்தியில்..,”ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!” என குறிப்பிட்டுள்ளார் !