பெர்கமோட் எண்ணெய் மற்றும் அதன் நன்மைகள் மிகச் சிலருக்குத் தெரியும். இது மன அழுத்தத்தை குறைப்பதாக சொல்லப்படுகிறது. பெர்கமோட் என்றால் என்னவென்று பார்த்தோமேயானால், இது சாத்துக்குடி,பெர்கமோட் மற்றும் எலுமிச்சை வகையைச் சார்ந்த சிட்ரஸ் வகை பழமாகும்.


இது ஆரஞ்சு ஒரு வகையாகும்.தெற்கு இத்தாலியில் உள்ள பெர்கமோட் நகரத்தின் பெயரை இந்தப் பழம் தாங்கி நிற்கிறது. பொதுவாக ஐரோப்பாவில் குளிரான காலநிலையை நிலவும்.இங்கு விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் வகையைச் சார்ந்த இந்த பெர்கமோட் ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் எண்ணையே பெர்கமோட் எண்ணெய் எனப்படும்.


அதாவது ஆரஞ்சு பழத்தை நேரடியாக உட்கொள்வதால் சிட்ரஸ் வகை பழங்கள் ஆன நெல்லிக்காய், எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களில் கிடைக்கும் விட்டமின் சி சத்தோடு கூட  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதே வேளையில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த இடத்தில் இருக்கும் உயிரியல் சூழலுக்கு ஏற்றார் போல அந்த மக்களுக்கு தேவையான சக்திகளை இந்த பெர்கமோட் ஆரஞ்சானது தருகிறது.


நமது ஊரில் உடம்பில் குளிர்ச்சியை உண்டு செய்ய தினம்தோறும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவோம். மேலும் உடம்பில் குளிர்ச்சியை உண்டு செய்ய வாரம் ஒரு முறை நல்ல எண்ணெய் தேய்த்து குளித்து புத்துணர்ச்சி பெறுவோம். இது போலவே ஐரோப்பாவில்பெர்கமோட் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் இதிலும் குறிப்பாக வேலையினால் ஏற்படும் அதிக ஸ்ட்ரஸை சரி செய்வதற்கு இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து கொள்கிறார்கள்.


முகப்பரு மற்றும் தோலுக்கு பெர்கமோட் எண்ணெய்


பெர்கமோட் எண்ணெயில் பல பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகள் உள்ளன, அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் தன்னகத்தி கொண்டுள்ளன. இது முகப்பருவினால் பாதிக்கப்பட்ட  சருமத்திற்கு சிகிச்சையளிக்க பெர்கமோட் எண்ணெயை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எண்ணெய்யில் உள்ள வலி நிவாரணி குணங்கள் நீர்க்கட்டிகள் மற்றும் பருக்கள் காரணமாக ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.


பெர்கமோட் எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்.


பெர்கமோட் எண்ணெயை கேரியர் ஆயில் எனப்படும் தேங்காய் என்னை நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து, பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் நீர்க்கட்டிகளுக்கு நேரடியாகப் பயன்படுத்துங்கள். இரவு முழுவதும் உங்கள் முகத்தில் விட்டு, மறுநாள் கழுவவும். பகல் நேரத்திலோ அல்லது சூரிய ஒளியிலோ இந்த கலவையை பயன்படுத்த வேண்டாம் 


பெர்கமோட் எண்ணெயை மற்ற எண்ணெயுடன் இணைந்து அதிகபட்ச பலன்களைப் பெற பயன்படுத்தலாம். லாவெண்டர் எண்ணெயுடன் இதை கலந்து தோல், முடி மற்றும் முகப்பருவுக்கு இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.   இந்த எண்ணையானது அரோமாதெரபிக்கு உதவுகிறது. தேயிலை மர எண்ணெயுடன் கலந்து, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்தவும், முகப்பருவை எதிர்த்துப் போராடவும் மற்றும் சருமத்தின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.


பெர்கமோட் எண்ணெயை நேரடியாகவும் நீங்கள் உங்கள் சருமத்தில் பயன்படுத்தலாம் அதற்கு முதலில்  சிறுதுளி எண்ணெயை தடவி ஒவ்வாமைதும் வராவிடில் நேரடியாக பயன்படுத்தலாம். பெர்கமோட் எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உணவு விஷத்தை எதிர்த்துப் போராடவும், கொழுப்பைக் குறைக்கவும், வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், எண்ணெய்க்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வேலை குறிப்பிட்டதை போல ஒரு துளிகள் உங்கள் சருமத்தில் தடவி எதுவும் ஒவ்வாமை ஏற்படவில்லை எனில் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் தோளுக்கு ஏற்ற வேறு தாவர எண்ணெய்களை உதாரணத்திற்கு தேங்காய் எண்ணெய் நல்ல எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்ற எண்ணெயுடன் இந்த எண்ணையை கலந்து பயன்படுத்தி பயன் பெறலாம்