ஜிம்மிற்குப் போகாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக்குறைப்பதற்கு இலவங்கப்பட்டை, கிரீன் டீ, அதிகளவு தண்ணீர் குடித்தல் போன்றவற்றை தினமும் தவறாமல் உங்களது வாழ்க்கை முறையில் பின்பற்ற வேண்டும்.


நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் மக்கள் உடல் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். குண்டாகி விட்டோம். அடுத்த என்ன செய்வது என்று பலரும் யோசிக்கும் போது தான் ஜிம்மிற்கு செல்லலாம் என மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில் இருக்கும் வேகம் நாளாக நாளாக படிப்படியாக குறைந்துவிடுகிறது. இதனையடுத்து ஆன்லைனில் வரும் தகவல்களை வைத்து உடல் எடையைக்குறைக்க முயல்கிறார்கள். மேலும் இதற்காகவே பல சென்டர்கள் ஆரம்பிக்கிறார்கள். இதனால் பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே இதுப்போன்ற சமயங்களில் உடலுக்கு ஆரோக்கியமான உடல் எடைக்குறைக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடவேண்டும். அதற்கான சில வழிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கான சில வழிமுறைகள் :


இலவங்கப்பட்டை:


வாசனை திரவியமாக மட்டுமில்லாமல் உடல் எடையைக்குறைப்பதற்கும் இலவங்கப்பட்டை நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கிறது. எனவே நாம் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் நமது உடல் எடையை நிர்வகிக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு நன்மைகள் உள்ளன. இவை இரண்டும் உடல் எடையைக்குறைக்க பயனுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையில் 1.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனை தேநீர் மற்றும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.





கிரீன் டீ:


உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தேர்வு செய்வது கிரீன் டீயைத் தான். இதில் உள்ள கேட்டசின்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் தினமும் கிரீன் டீயை நாம் உபயோகிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. உடல் எடைக் குறைப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் கிரீன் டீயில் காப்ஃபைனுடன், தயனைன் என்னும் அமிலோ அமிலமும் உள்ளது. இந்த கிரீன் டீயை தினமும் பருகும் போது இதய நோய் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்க முடியும் எனக்கூறப்படுகிறது.


மது அருந்துவதைக்குறைத்தல்:


ஏற்கனவே நடத்திய ஆய்வறிக்கையின் படி, ஆல்கஹால் அதாவது மது அருந்துவது உடல் எடை அதிகரிக்க உதவியாக உள்ளது. மதுவில் உள்ள கிலோஜூல்கள் நமக்கு அதிக பசி உணர்வதைத்தூண்டுகிறது. எனவே அதிகளவில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பது என்பது 41 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதோடு ஏற்கனவே ஒருவர் உடல் பருமன் உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் உடல் எடையானது 35 சதவீதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் முதலில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.


போதுமான அளவு தண்ணீர் குடித்தல்:


நாம் எந்தளவிற்கு தண்ணீர் குடிக்கிறமோ? அந்த அளவில் நமது உடலின் ஒட்டுமொத்த சூழலையும் பராமரிக்க உதவியாக உள்ளது. பொதுவாக நாள் ஒன்றுக்கு நாம் 2-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதுக்குறித்து ஹார்வர்ட் ஹெல்த் அறிக்கையின் படி, தினசரி நமது உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்கும் போது தைராய்டு, சிறுநீரகப்பாதிப்பு, கல்லீரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இதய நோய் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு தண்ணீரைக்குடிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்க உதவியாக உள்ளது.





மேலும் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் எடைக்குறைவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே இதுப்போன்று உடல்நலத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் உணவு முறைகளை நீங்கள் கொஞ்சம் டிரை பண்ணிப்பார்க்கலாம்.