பயணம் என்பது குறித்த பார்வை எல்லோருக்குமே பொது அல்ல, ஒரு சிலர் பயணங்களை வெகுவாக விரும்பும் மனிதராக இருக்கலாம், ஒரு சிலர் பயணங்கள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம், பலருக்கும் பயணம் அலர்ஜியாக இருக்கலாம். ஆனால் வெகுவாக பலரும் பல இடங்களை கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்தான். அப்படி இல்லை என்றாலும் பயணம் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் சிலருக்கு, அவர்களது வேலை நிமித்தமாக, குடும்பம் நிமித்தமாக இருக்கலாம். ஆகையால் பயணம் என்பது இன்றியமையாதது. அப்படி நாம் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கே தங்க வேண்டிய சூழல் வரும்போது, ஹோட்டல்களில் தங்குவது வழக்கம். அதில் தான் சில நுணுக்கங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதை எங்கு கற்கலாம் என்றால், பயணத்தையே தொழிலாக வைத்திருப்பவர்களிடமிருந்துதான். அவர்கள்தான் விமான பணிப்பெண்கள். விமானப் பணிப்பெண்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். மேலும் ஹோட்டல் அறைகளில் தங்குவதற்கு பழகியவர்கள் அவர்கள். எனவே அவர்களிடம் இருந்து சில பயண குறிப்புகளை ​​நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.



 



  1. வாட்டர் பாட்டில் டெக்னிக்


Mirror.co.uk மேற்கோள் காட்டியபடி, எஸ்தர் என்ற கேபின் குழு உறுப்பினர் தனது கருத்துக்களை TikTok இல் பகிர்ந்து கொண்டுள்ளார். விடுமுறை நாட்களில் அடிக்கடி ஹோட்டல்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒரு பதிவில், டச்சு விமானப் பணிப்பெண், மக்கள் முதலில் ஹோட்டல் அறைக்குள் நுழையும் போது படுக்கைக்கு அடியில் தண்ணீர் பாட்டிலை எறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். படுக்கைக்கு அடியில் தண்ணீர் பாட்டிலை வீசி எரிவதற்கு காரணம், "படுக்கைக்கு அடியில் யாரும் இல்லை என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பதற்காக என்று கூறுகிறார். பாட்டில் மறுபுறம் வெளியே வரவில்லை" என்றால், ஹோட்டல் ஊழியரை அழைத்து, மேலும் விசாரிக்க வேண்டும். படுக்கையின் மறுபக்கத்திலிருந்து பாட்டில் வெளியே வந்தால், நீங்கள் வழக்கம்போல் உங்கள் வேலையை தொடரலாம்.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI: புஜாராவுக்கு இடமில்லையா..? அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார்..? வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஒரு பார்வை!



  1. ஸ்னீக்கர் ஹேக்


ஸ்பெயினைச் சேர்ந்த டெமி போனிடா என்ற மற்றொரு விமானப் பணிப்பெண், நீங்கள் வெளியே இருக்கும்போது உங்கள் ஹோட்டல் அறைக்குள் யாராவது நுழைந்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க ஸ்னீக்கர் ஹேக் என்னும் முறை உள்ளது என்கிறார். அவர் தனது 70,000 TikTok பின்தொடர்பவர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த டிரிக் குறித்து பேசிய அவர், "டோன்ட் டிஸ்டர்ப் கார்டை, கதவின் நடுவே வையுங்கள், உங்கள் அறையில் யாராவது இருந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும்" என்று அறிவுறுத்தினார்.



3. சோதனை செய்ய வேண்டிய நான்கு இடங்கள்


மற்றொரு விமான பணிப்பெண், அவர் ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் நான்கு முக்கிய சோதனைகளை செய்கிறார் என்று விளக்கினார். மனிதர்கள் ஒளிந்துகொள்ள முடிந்த நான்கு இடங்களை சோதனை செய்வதாக குறிப்பிட்டார். கதவுகள், திரைச்சீலைகள், பெரிய அலமாரிகள், படுக்கைகளுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.