விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் கிடக்கும் மர்ம கன்டெய்னரால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லை பகுதியில் விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கண்டெய்னர் ஒன்று இருக்கிறது. அந்த கண்டெய்னர் யாருடையது என்பது தெரியவில்லை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயம் சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான கன்டெய்னர் கொண்டுவரப்பட்டதா? அல்லது கன்டெய்னரில் கல்குவாரியில் அமைப்பதற்கு தேவையான வெடி பொருட்கள் உள்ளதா? என இன்று காலை முதல் ஒரு பொய்யான செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பகுதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.


எனவே இது குறித்து தகவல் அறிந்த ரோஷனை காவல் ஆய்வ்ளார் அன்னக்கொடி மற்றும் வெள்ளிமேடு பேட்டை உதவி காவல் ஆய்வாளர் தமிழ்மணி கன்டெய்னர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் மீது விசாரணை செய்ததில் கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கன்டெய்னர் என்பது தெரியவந்தது. ரோஷனை காவல் ஆய்வாளர் கன்டெய்னரை திறந்து பார்த்ததால் எந்தவித மர்ம பொருட்கள் இல்லை என தெரிய வந்ததை அடுத்து சில மாதங்களாக இருந்த பொதுமக்களிடையே அச்சம் நீங்கியது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண