சமீப காலங்களாக இளைஞர்கள் அதிகளவில் இதயநோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதனைத்தவிர்ப்பதற்கு முறையான உணவு முறையினை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


நம்முடன் பழகிவந்த ஒருவர் திடீரென இறந்து விடுகிறார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தும். அதிலும் இளம் வயதுடைய மரணம் என்பது சொல்ல முடியாத அளவிற்கு சோகத்தினை ஏற்படும். இதுப்போன்ற திடீர் மரணங்களுக்கு ஒன்று விபத்து அல்லது இதய நோய் தான் முக்கியக்காரணமாக அமைகிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஏற்படும் திடீர் மரணத்திற்கு இதய நோய்கள் ஒரு முக்கியக் காரணமாகும. ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் அளவிற்கு மக்களின் உயிர்களைக் காவு வாங்குவதாகத் தகவல் கூறுகின்றனர். அதிலம் சமீபகாலங்களாக இதய நோயின் காரணமாக இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமில்லாத உணவு வகைகள், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவை முக்கியக்காரணங்களாக உள்ளது. அதிலும் ஊரடங்கு காலத்தில் நம்முடைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் முற்றிலும் மாறிப்போனது. உடல் பயிற்சிக்கு கூட ஜிம்களுக்கு செல்ல முடியாமை, அதிக மன உளைச்சலுடன் வீட்டில் இருந்து பணிபுரிவது, தேவையில்லாத ஜங்க் புட்களை உட்கொள்வது போன்றவையும் இளைஞர்களின் இதய  நோய் பாதிப்பிற்கு ஒரு காரணமாக அமைகின்றன. மேலும் 24 மணி நேரம் எந்த உடல் உழைப்பும் இல்லாமல் சமூக வலைத்தளங்களைப்பயன்படுத்துவது மக்களிடம் அதிகரித்து விட்டது. எனவே இதுப்போன்ற சூழலில் இளைஞர்களை அதிகம்  தாக்கி வரும் இதய நோயிலிருந்து தப்பிப்பது எப்படி? பாதுகாப்போடு இருக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி நாமும் கட்டாயம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.


 மன அழுத்தம்:


இளைஞர்களாக இருந்தாலும் சரி வயதானவர்களாக இருந்தாலும் மன அழுத்தம் பொதுவான விஷயம்இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தோடு ஒருவர் தன்னுடைய வாழ்க்கையினைப்பயணிக்கிறார் என்றால் அவருக்கு ஆயுட் காலம் சில நாட்களே உள்ளது என்பதை நாம் மருத்துவமனைக்குச் செல்லாமலேயே தெரிந்துக்கொள்ளலாம். ஆம் நீண்ட கால மன அழுத்தம் கார்டிசோலின் அளவு இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவினை அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தத்தினால் உயர் இரத்த அழுத்தம், மார்பில் வலி மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக இதய தசைகளைப்பலவீனப்படுத்தி அனைவரையும் பாதிப்பிக்கு உள்ளாக்குகிறது.





புகைப்பிடிக்கும் பழக்கத்தினைக் கைவிட வேண்டும்:  


இளைஞர்கள் பெரும்பாலும் புகைப்பிடிக்கும் பழகத்தினைக்கொண்டுள்ளனர். குறிப்பாக புகைபிடிப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் மற்றும் மூளைப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே தன் வாழ்நாளில் மேலும் மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தினை கைவிடமால் இருந்தால் அது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக தற்பொழுது இதய நோயினால் 5 பேர் உயிரிழக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் நிச்சயம் புகைப்பிடிக்கும் பழக்கத்தினைத் தன்னுடன் வைத்துள்ளார் என்பது தான் உண்மை. எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் இனி இளைஞர்கள் கைவிடுவது அவர்களின் ஆயுட்காலத்தினை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க உறுதுணையாக இருக்கும்.


உடற்பயிற்சியுடன் கூடிய வாழ்க்கை முறை:


இன்றைய சூழலில் இடைவிடாது பல்வேறு பணிகளை நாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இதுப்போன்ற வாழ்க்கை முறையினை நாம் மாற்றிக்கொள்ளாவிடில் உடலில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே நம் உடலில் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில், உடல் பயிற்சி மிகவும் அவசியமானது. எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் கட்டாயம் உடறபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.


 இரவு தூக்கத்தினைத் தவிர்க்கக்கூடாது:


தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். அதிலும் இரவு நேர தூக்கத்தினைத் தவிர்ப்பது என்பது மனம்  மற்றும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியும். முன்னர் கூறியதுப்போன்ற அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டாலும் இதயப்பிரச்சனைகள் ஏற்படும். எனவே ஒவ்வொரு நாளும் 7-8 மணி நேரம் இரவுத்தூக்கத்தினை நேரத் தூக்கத்தினைஉறுதி செய்வது முக்கியமான ஒன்று.


 ஜங்க் புட்(junk food) :


இன்றையக்காலக்கட்டத்தில் நம்முடைய உணவு முறைகள் முற்றிலும் மாறுபடத்தொடங்கியது. தற்பொழுது அதிகளவில் junk food களைத்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு சுகாதாரப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனைத்தவிர்ப்பது நல்லது. இதற்குப்பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன் போன்ற சீரான உணவுகளைஉடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.





மேலும், 8 -10 மணி நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நேரத்தினைத்தவிர்த்து அதிக நேரம் ஒருவர் பணிப்புரிகிறார் என்றால் அவரையே அறியாமல் அவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் ஏற்படும் தூக்கமின்மை போன்றவை மன ஆரோக்கியத்தினைக் கெடுப்பதோடு சில நேரங்களில் விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது. இதோடு மாரட்டைப்பினையும் ஏற்படுத்துகிறது. மேலும்  உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்ற பல்வேறு நோய்கள் இருந்தாலும் இதனை முறையாக கண்காணித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் இதுவே இதய நோய் ஏற்படுத்த ஒரு வழியாகவும் அமைகிறது.