வாழை பழம் என்று பொதுவாக இன்றைய தலைமுறையினரால்  சொல்லப்பட்டாலும், இதில் பல வகைகள் உள்ளன. இதில் இருக்கும் வகைகளுக்கு ஏற்ப இதில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளும் இருக்கிறது. தினம் 2 பழங்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் வருகிறது என தெரிந்து கொள்ளலாம்.


பெரும்பாலோனோர் வீடுகளில் வாழை பழம் இல்லாமல் இருக்காது. மற்ற பழங்கள் வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் உருவானாலும், இந்த வாழை பழம் விலை மலிவாகவும், அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக இருக்கும். இதை வைத்து நிறைய பழ மொழிகளும், ஜோக்குகளும் இருந்தாலும், இதன் பயன்கள் தெரிந்து கொண்டால், அனைவரும் இதை தவறாமல் எடுத்து கொள்வார்கள். சிலருக்கு இந்த பழம் இல்லை என்றால் அந்த நாள் முழுமையடையாது. அந்த அளவிற்கு வாழை பழம் அவர்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.




செவ்வாழை,ஏலரிசி,கருவாழை,அடுக்கு,நவரை,நேந்திர,மொந்தன்,கற்பூரம்,பூவன்,மலை,பச்சை நாடன்,மோரிஸ்(பச்சை/மஞ்சள்),ரஸ்தாளி,பேயன் போன்ற நிறைய வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒரு வாழை பழம் பேமஸ் ஆக இருக்கும். அந்தத்த நாடுகளில் சுற்றுசூழலுக்கு ஏற்ப வாழை பழங்கள் வளரும்.


மலசிக்கல் - இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால், மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மலம் இறுகி கட்டியாக இருந்தாலும், வெளியேற்றும் போது கடினமாக இருப்பவர்களும், வாழை பழம் எடுத்து கொள்ளலாம். நாட்பட்ட மலசிக்கல் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.




நீரிழிவு நோய் - நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் வாழை பழத்தை எடுத்து கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பொறுத்து, வாழை பழம் பரிந்துரைக்கப்படும். இது உங்கள் உடல் நிலை பொறுத்து மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.




தசை பிடிப்பு - இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தசைகள் சீராக இயங்குவதற்கு உதவும். அடிக்கடி தசை பிடிப்பு பிரச்சனையில் அவதி படுபவர்கள் தினம் 2 வாழை பலத்தை எடுத்து கொள்ளலாம்.


அதிக கலோரி - இதில் அதிக கலோரி, ஸ்டார்ச் எனும் மாவு சத்து நிறைந்து இருப்பதால், அதிக தூரம் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும், உடற் பயிற்சி செய்பவர்கள் அதிகம் வாழை பழம் எடுத்து கொள்வார்கள். இதில் கலோரி இழப்பையும், உடல் சோர்வு இல்லாமல் பாதுகாக்கும். மேலும், உடற் பயிற்சினால் வரும் தசை பிடிப்பு, வலி குறைய உதவும்.


நெஞ்செரிச்சல் - நெஞ்செரிச்சல், அல்சர், போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு வாழை பழம் சிறந்த மாற்றாக இருக்கும். வாழை பழம் சாப்பிட கொஞ்ச நேரத்தில் நெஞ்செரிச்சல் குறையும். வயிற்றில் அமிலம் சுரப்பு சமநிலைக்கு வரும்.




தினம் 2 வாழை பழங்களை எடுத்து கொள்ளுங்கள். இது போன்ற எண்ணற்ற நன்மைகளை அனுபவியுங்கள்.