இன்றைய அதிவேகமான உலகத்தில், அனைவரும் பணம், பதவி அல்லது அங்கீகாரம் ஆகியவற்றை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றோம். இதனால், உடலுக்கு தேவையான ஓய்வும்,மனதிற்கு தேவையான மன நிம்மதியும் இழந்து விடுகிறோம். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றுவதைப் போல, மனதில் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு எச்சரிக்கை அறிகுறிகளாக,நமது தோலில் படை, சொறி மற்றும் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளை கொடுக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தின் காரணமாக உடலின் தோலில் வெளிப்படும் இத்தகைய பாதிப்புகள், முகம், கழுத்து, கை மற்றும் கால்கள் என உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். சில நேரங்களில் இவை தடிப்புகளாகவோ அல்லது கூச்சம் நிறைந்த தன்மையுடனோ அல்லது அரிக்கும் தன்மையுடனோ காணப்படும்.


இப்படி மன அழுத்தத்தின் காரணமாக நரம்பு மண்டலம் வெளிப்படுத்தும் கார்டிசோல் என்ற அமிலத்தின் காரணமாக, தோலில் படை, அரிப்பு மற்றும் தடிமன், கூச்ச உணர்வு போன்றவை ஏற்படுகிறது. ஆகவே பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும், இத்தகைய மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.


முதலில் உடல் சார்ந்த பிரச்சனைகள், அல்லது வலிகள் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின், உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி,தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


இது போலவே கடுமையான உடல் உழைப்பு,இருந்தாலும் கூட, ஓய்வு இல்லாத காரணத்தினால், மனதில் அழுத்தம் அதிகரித்து, தோலில் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்றும். ஆகவே கடுமையாக வேலை செய்பவர்கள், ஓய்வு எடுத்துக் கொள்வது, மிகவும் அவசியம்.


தூக்கமின்மை காரணங்களால் கூட, மன அழுத்தமானது அதிகரித்து, தோலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.ஆகவே ஆக குறைந்தது 8 மணி நேரங்கள் தூங்குவது, மன அழுத்தத்தை போக்கி, சரும பிரச்சனைகளை தோற்றுவிக்காது.


போதுமான ஓய்வு, உடல் சார்ந்த பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது மற்றும் சரியான தூக்கம் என அனைத்தும் இருந்தும் கூட,மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால்,  அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியமாகும்.


இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணங்கள் புலப்படாத போது கூட, பின்வரும் பயிற்சிகளை கடைப்பிடித்தால்,காரணங்கள் இல்லாமல் வரும் மன அழுத்தம் கூட வராது. தியானம், மனஅழுத்தம், படபடப்பு மற்றும் அதனால் வரும் தலைவலி போன்றவற்றில்,இருந்து விடுபட,சரியான ஆசிரியரிடம் தியானம் பழகி,தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, மனஅழுத்தமானது முற்றிலும் விடுபடுகிறது.


யோகாசனம்:


இதுவும் கூட ஆகச் சிறப்பான மன அழுத்தத்திலிருந்து ஈடுபட உதவும்.,மேலும் உடலுக்கு அதிகப்படியான ஆக்ஸிஜனை தருவதோடு கொழுப்பை கரைப்பதற்கும் மற்றும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும், விளங்குவதற்கும் வழி செய்கிறது. ஆகவே சரியான ஆசிரியரிடம் யோகாசனம் பயின்று தினமும் பயிற்சி செய்து வரும் போது மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.


உடற்பயிற்சி: நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவது,அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவது,என்பது, உடலுக்கு தேவையான , அதிகப்படியாக வழங்கி,உடலையும் மனத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.ஆகவே இதில்  எது பொருத்தமான ஒன்றோ அதை தேர்ந்தெடுத்து,அதற்கு தினமும் நேரம் ஒதுக்கி செய்து வரும் போது,மன அழுத்தத்தினால் வரும் தோல் சார்ந்த பிரச்சனைகள் நம்மை அணுகாது.