சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போதி பேசிய ஆளுநர் , "பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்தி வந்தனர். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்றுநோக்குகிறது. உலகிலேயே பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்திய உள்ளது.
உலகில் பழமையான மொழி:
தமிழ் மொழி உலகில் பழமையான மொழி. நான் அறிந்த வரையில் அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டும் பேசுகின்றனர் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், இன்று சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில்தான் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. குடிநீரில் மலத்தை கலப்பது, தலித் பெண்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று ஆளுநர் தெரிவித்தார்.
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன:
தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதில் 100 வழக்குகளில் 93 பேர் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உள்ளனர். டார்வின் கோட்பாடு என்பது வளம் கொண்டவர்கள் தங்களுக்கானவற்றை எடுத்துக் கொள்வார்கள், மற்றவர்கள் அது கிடைக்க பெறாதவர்களாக இருப்பார்கள்.
ஆனால் அதனை மாற்றி ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறோம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
11 கோடி வீடுகளில் இன்று கழிவறைகள் உள்ளன. குடிநீர் கிடைக்கிறது. 8 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று ஆளுநர் ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.