இருதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். உடற்பயிற்சிகள் மேற்கொள்ள நீங்கள் முடிவுசெய்தால் மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமானது. ஒவ்வொருத்தரின் நோயின் தன்மையைப் பொறுத்து பயிற்சிகள் அவற்றை செய்யும் நேரம் ஆகியவை மாறுபடும் என்பதால் இந்த நிபந்தனை. பலவீனமான இருதயம் கொண்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய சில பொதுவான உடற்பயிற்சிகளை காணலாம்.


நடைபயிற்சி


தினமும் நடைபயிற்சி செய்வதில் இருந்து தொடங்குங்கள். நடைபயிற்சி செய்வது மிக எளிய பயிற்முறை அதுமட்டுமில்லாம இது மட்டுமில்லாமல் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவக்கூடியது. தினமும் காலை அல்லது மாலை ஒரு சிறிய நடை சென்று வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகப்படுத்துவது  மற்றும் சற்று கடினமான பயிற்களை தொடங்குவது என  அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


சைக்ளிங்:


சைக்கில் ஓட்டுவதும் நடைபயிற்சி போலவே குறைந்த அளவிலான ஆற்றலை பயன்படுத்தக் கூடிய ஒரு ஒரு பயிற்சியே ஆகும். இதய நோயாளிகள் தொடர்ச்சியாக சைக்ளிங் செய்வது இதய நாளங்களுக்கு நல்லது.


நீச்சல் பயிற்சி:


மூட்டு வலி இருப்பவர்கள் தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சிகள் செய்வது அவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது. மற்ற இரு பயிற்சி முறைகள் போலவே இதுவும் இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது.


ரெசிஸ்டன்ஸ் ட்ரெய்னிங்


மூட்டு வலி உடையவர்கள் மற்றும் பலமீனமாக தசைகளை கொண்டவர்கள் ரெசிஸ்டன்ஸ் ட்ரெய்னிங் என்று சொல்லப்படும் சில வகை பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். உடல் தசைகளின் வலிமை ஆகுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது இந்த பயிற்சிகளை செய்யுங்கள்.


யோகா


யோகா பயிற்சிகள் மேற்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவக்கூடியது. மேலும் இதய நோயாளிகள் யோகா செய்வது அவர்களில் ரத்த ஓட்டம் மற்றும் சுவாஸிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.மேலும் உடலின் சமநிலையாய் வைத்திருப்பதற்கு யோகா உதவக்கூடியது


தாய் சி


தாய் சி என்று சொல்லப்படும் உடற்பயிற்சி முறை என்பது மன அழுத்தத்தை குறைத்து நீங்கள் சமநிலையோடு  இருக்க உதவக்கூடியது.ஆனால தகுதியான பயிற்சியாளரிடம் முறையாக பயிற்சி எடுப்பது மிக்கியம்.


பைக்கிங்


ஸ்டேஷனரி பைக்கிங் என்று சொல்லப்படுவது ஜிம் இல் அல்லது நீங்கள் உங்களுடைய வீட்டில் செய்யக்கூடிய பயிற்சியே. சைக்கிளை போன்ற ஒரு உடற்பயிற்சி கருவியில் தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்வது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கக் கூடியது.


இந்த பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைபடி மேற்கொள்வது மிக முக்கியமானது. அதே நேரத்தில் ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து ஒவ்வொரு உடற்பயிற்சிகள் பயனளிக்கக்கூடியது. அதனை தெரிந்துகொண்டு இந்த பயிற்சிகளை செய்தால் இதய நோய் இருப்பவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன முன்னேற்றங்களை பார்க்கலாம்.