Karnataka Election Result 2023: பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழர்கள்? கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் செய்த சம்பவம்...!

கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Karnataka Election Result 2023: கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காங்கிரஸ் அபாரம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை தாண்டி விட்டது.

இந்நிலையில், தற்போதையை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும்,  பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.  இந்நிலையில், பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தமிழர்கள் வாக்கு யாருக்கு?

தமிழ்நாட்டை தாண்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. குறிப்பாக, 28 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மாநிலத் தலைநகரான பெங்களூருவில் அதிக தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனால்தான், கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதை  வழக்கமாக கொண்டுள்ளது அதிமுக.

அதன்படி, ராஜாஜிநகர், காந்திநகர், காமராஜப்பேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர், சி.வி. ராமன் நகர் ஆகிய தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் கணிசமான உள்ளது. 

காங்கிரஸை தேர்ந்தெடுத்த தமிழர்கள்

இந்நிலையில், கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழர்கள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கு பகுதிகளில் காங்கிரஸ், பாஜகவின் நிலவரங்கள் பற்றி காணலாம். 

ராஜாஜி நகர்

ராஜாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புட்டாணா 4,253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் 3,341 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். சமீபத்தில் தான் சிட்டிங் எம்எல்ஏவான புட்டண்ணா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திநகர்

காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தினேஷ் குண்டு ராவ் 3,483 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சப்தகிரி கவுடா 3,460 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

காமராஜப்பேட்டை

காமராஜப்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சமீர் அகமது கான் 3,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் ராவ் 1,638 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

புலிகேசி நகர்

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, புலிகேசி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசா 3,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோன்று இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முரளி 962 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

சிவாஜிநகர்

சிவாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரிஸ்வான் அர்ஷாத் 5,359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோன்று இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்திரன் 2,693 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

சி.வி.ராமன் நகர்

சி.வி.ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் குமார் 1,975 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோன்று இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரகு 2,536 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இந்த தேர்தலில் பாஜக கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்தது.  ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராக படுதோல்வியை தமிழகர்கள் வசிக்கும் தொகுதியில் பாஜக கண்டுள்ளது. அதன்படி, தமிழர்கள் வசிக்கும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வெற்றி முகம் கண்டுள்ளது. அதேபோன்று கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement