Aliv Health Benefits: உடல் நன்மைக்காக மேஜிக் செய்யும் ஆளி விதைகள்... பலன்கள் என்னென்ன? முழு விவரம்..

ஆளி விதைகளை மக்கள ஒரு சூப்பர் உணவுப்பொருளாகக் கருதுகின்றனர். உடல் உடையைக்குறைப்பது தொடங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டிருக்க இதனை நாம் பயன்படுத்துகிறோம்.

Continues below advertisement

ஹலிம் விதைகள் தமிழில் சாலியா அல்லது ஆளி விதைகள் என அழைக்கப்படுகிறது. இதில் சத்து நிறைந்துள்ளதால் தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும் என உணவு நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், பல நன்மைகளை உள்ளடக்கிய இந்த சாலியா விதைகளால் உடலுக்கு என்ன பயன் என்பதை பார்ப்போம்.

Continues below advertisement

ஆளி விதைகளை மக்கள ஒரு சூப்பர் உணவுப்பொருளாகக் கருதுகின்றனர். உடல் உடையைக்குறைப்பது தொடங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டிருக்க இதனை நாம் பயன்படுத்துகிறோம்.

இரத்தச்சோகைக்கு தீர்வு தரும் ஆளி விதைகள் | Halim Seeds for Hemoglobin:

சிறிய சிவப்பு நிறம் கொண்ட இந்த அலிவ் விதைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இதனால் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சரி செய்வதற்கு மருத்துகள் எடுத்துக்கொள்ளும் வேளையில் இந்த அலிவ் விதைகளையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் சியும் அதிகளவில் உள்ளது.

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சை | Aliv Seeds for Constipation:

இந்த அலீவ் விதைகள் மலச்சிக்கல் மற்றும் அஜீரணக்கோளாறு போன்ற செரிமானப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இதனை தவறாமல் உட்கொள்ளும் போது செரிமானப்பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதே சமயம் அதிகமாக இதனை உட்கொண்டு வயிற்றுப்பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால்  உற்பத்தி அதிகரிப்பு | Halim Seeds for Lactation:

ஹலீம் அல்லது அலீவ் விதைகளில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும்  தாய்ப்பாலை மேம்படுத்தக்கூடிய கேலக்டாகோக் பண்புகளைக்கொண்டுள்ளது. எனவே குழந்தைப்பிறப்புக்கு பிறகு இந்த விதைகளை நெய், வெல்லம், ரவை , உலர்ந்த தேங்காய் மற்றும் பாதாம் போன்றவற்றால் செய்யப்பட்ட லட்டுவாகவும்  தாய்மார்களுக்கு கொடுக்கலாம் .இதனால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கிறது.

மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தும் | Aliv Seeds for Menstruation

பெண்களுக்கு வழக்கமான மாதவிடாய் சுழற்சித்தான் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது பல பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தான் இதனைக் குணப்படுத்துவதற்கு ஆளி விதைகளை உட்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. எனவே இந்த விதைகளை உட்கொள்ளும்போது ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதோடு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது | Weight Loss:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சிப்பவர்கள் இந்த ஆளி விதைகளை கொஞ்சம் பயன்படுத்திப்பார்க்கலாம். இதில் புரதம் மற்றும் ஃபைபர் சத்துக்கள் உள்ளதால் பசி அதிகளவில் ஏற்படுவது மட்டுமில்லாமல், அதிகப்படியான உ ணவு உட்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது. எனவே உடல் தசைகளைப் பராமரிக்கவும், ஆரோக்கிய முறையில் உடல் எடைக்குறைக்கவும் உதவியாக உள்ளது.

இதோடு இந்த விதைகளில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை நாம் உட்கொள்ளும்போது ஆஸ்துமாவின் அறிகுறிகளிலேயே அதற்கு நிவாரணம் தருகிறது. மேலும் இருமல், தொண்டை புண் போன்றவற்றுக்கும் நல்ல சிகிச்சையளிப்பதாக உள்ளது. எனவே குளிர், மழைக்காலம் போன்ற பருவகால மாற்றங்களின்போது இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள முயலவேண்டும்.

இந்த விதைகள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளித்தாலும் அதிகளவில் உட்கொள்ளக்கூடாது. 1 தேக்கரண்டி விதைகளுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் வாரத்தில் 3 முதல் 4 முறை இதனை வழக்கமாக நாம் சேர்த்துக்கொள்ளலாம். ஆளி லட்டு, ஆளி சூப் போன்ற பலவழிகளில் இதனை நாம் நம்முடைய ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தலாம்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola