சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழுபவர்களுக்கு ஊபர், ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும் . வீட்டில் இருந்த படியே உணவுகளை மொபைல் மூலம் ஆடர் செய்துக்கொள்வதும், உணவு தற்போது எந்த நிலையில் இருக்கிறது என அது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்வதும் ஸ்மார்ட்ஃபோன் செய்த புரட்சிகளுள் ஒன்றுதான். இந்த நிலையில் பிரபல uber eats நிறுவனம் விண்வெளிக்கே உணவுகளை அனுப்பி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் பிரபல ஜப்பானிய தொழிலதிபர் யுசாகா மேவாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. யுசாகா மேவா மிகப்பெரிய பணக்காரார் அவர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். யுசாகாவிற்கு தற்போது 46 வயது ஆகிறது ஆனாலும் அவர் விண்வெளிக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல . கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்தே அவர் விண்வெளியை சுற்றிப்பார்க்க சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 2:30 ET மணியளவில் Soyuz MS-20 என்ற விண்கலம் மூலம் தனது உதவியாளருடன் வெண்வெளிக்கு சென்றுள்ளார் யுசாகா மேவா. அப்போது தன்னுடன் uber eats இல் ஆடர் செய்த, விண்வெளி வீரர்களுக்கென பிரத்யேகமாக பேக் செய்யப்பட்ட உணவை எடுத்து சென்றுள்ளார். என்ன! ஆடர் செய்த அரை மணி நேரத்தில் உணவு வரும் என்ற கோட்பாடை ஊபர் கொண்டிருந்தாலும் , விண்வெளிக்கு செல்லும் பொழுது சற்று கோட்பாடுகளை தளர்த்த வேண்டியிருக்கும். விண்கலமானது 248 மைல்களை கடந்து , எட்டு மணி நேரம் 34 நிமிடங்களில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது. டிசம்பர் 11 அன்று காலை 9:40 ET மணிக்கு உணவை அங்குள்ள விண்வெளி வீரருக்கு சாகா மேவா uber eats இன் உணவை டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட அந்த உணவு பையில் , மாட்டு இறைச்சி , பன்றி இறைச்சி , கோழி இறைச்சி மற்றும் காணங்கெளுத்தி மீன் ஆகியவை சமைக்கப்பட்டு , விண்வெளியில் சாப்பிடுவதற்கு ஏதுவாக பேக் செய்யப்பட்டிருந்தது.