பலருக்கும் ஆரோக்கியமான கூந்தலை பெற ஆசை இருக்கும். இதற்காக சந்தையில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்த மக்கள் தயராக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து அந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தும் அனைவருக்கும், அவர்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைப்பதில்லை. அத்துடன், யூடியூப் போன்ற செயலிகளில், பல போலி மருத்துவர்கள், ஆதரமற்ற மருந்துகளை பயன்படுத்த ஆலோசித்து வருகின்றனர்.
 அவர்கள் சொல்லும் சம்மந்தம் இல்லாத குறிப்புகளை பின்பற்றுவர்கள், ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். 



உடம்பிற்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை உண்டு, முறையாக உடற்பயிற்சி செய்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு பழக்கத்தை குறைத்து, மன அமைதிக்கு தேவையான தியானம் போன்ற விஷயங்களை மேற்கொண்டால்தான் உடல் நலம் சீராக இருக்கும். இதை செய்ய மறுத்தால், 
ஒன்றின் பின் ஒன்றாக பிரச்சினைகள் வரும்.


முடி, நகம் போன்றவைகள் உடலின் டெட் செல்கள் ஆகும். இது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும். உடல் நலமாக இருந்தால், ஆரோக்கியமான முடி மற்றும் நகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது குறை இருந்தால், முடி உதிரும், நகங்கள் சொத்தையாக மாறும்.


அதனால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கொண்ட உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில், வலுவான கூந்தலை பெற ஆசைப்படுபவர்கள்,  இந்த இரண்டு சூப்பர் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த டயட்டை சான்றுபெற்ற ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்தியராஜ் பரிந்துரை செய்துள்ளார்.






1 தேக்கரண்டி கருவேப்பிலை போடி மற்றும் 3 சிறு நெல்லிக்கை சேர்த்த மோர்


நெல்லிக்கைகாயில், வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது, ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும். அத்துடன் இந்த பானகத்தில் இருக்கும் கருவேப்பிலையில், வைட்டமின் பி இளநரை வராமல் பாதுகாத்து, அடர்த்தியான முடியை பெற உதவும்.  இந்த சூப்பர் பானத்தை தினமும், காலை 11:30 மணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.


தயிர் கலந்த முளைவிட்ட பயிறு சாட் 


முளைவிட்ட பயிறு சாட், குறைந்த கலோரிகளை கொண்ட ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். இந்த சாட்டை, மாலை 5 மணிக்கு எடுத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், சாட் மசாலாவை இத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் சிற்றுண்டியின் சுவையை மேம்படுத்த உதவும்.


மேலும் படிக்க : Hyper Thyroidism : ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?