கூந்தல் அடர்த்தியாக மென்மையாக வளர:


1. லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள் விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன் 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து தலையில் நன்றாக தடவி 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின் ஷாம்பூவால் தலை முடியை தேய்த்து வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசினால் முடி விரைவில் அடர்த்தியாகும். இதனை வாரம் ஒருமுறை முயற்சிக்கலாம்.


2. கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை (tea bags) 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும். இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு. மேலும் இது தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும்  உதவுகிறது


3. க்ரீன் டீ தலை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. தலையில் தீடீரென்று ஏற்படும் கொப்புளங்கள் அல்லது பருக்கள் போன்றவற்றால் கூட அதிகப்படியான எண்ணெய் சுரக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு க்ரீன் டீ உதவுகிறது. எண்ணெய் பசையைப் போக்குவதோடு கூந்தலை மென்மையாக பொலிவாக வைக்க உதவுகிறது.


4. இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். கூந்தல் மினுமினுக்கும்.


5. செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.


6. கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.


7. வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.


8. ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.


9. வெள்ளைக் கரிசாலைச் செடியைக் கசக்கி சிறிது நீர்விட்டு சாறு எடுத்து அதில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை சம அளவு கலக்கி, எண்ணெய் அடியில் மெழுகுப் பதத்தில் கசடு வரும் வரை காய்ச்சி இறக்கவும். கிட்டத்தட்ட 1 லிட்டர் தைலம் கிடைக்கும். அதில் மீண்டும் சம அளவு வெள்ளைக் கரிசாலைச் சாறு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். மறுபடியும் நீர் வற்றி இன்னும் அடர்த்தியான தைலம் கிடைக்கும். இதேபோல் ஏழு முறை காய்ச்சி எடுத்த தைலத்தைப் பயன்படுத்தினால், முடி கொட்டுவதைத் தடுக்கலாம், இளநரை வராது, உடல் சூடு தணியும், பொடுகும் நீங்கும், ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.


10. பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கையில் கிளவுஸ் அணிந்து தலைமுழுவதும் தேய்த்து பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடி இரண்டு மணி நேரம் கழித்து கழுவினால் கூந்தல் கருமையாக வளர்வதோடு நல்ல வலுப்பெறும்.


11. புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது.  பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.


12. தயிரில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு கலந்து, அதனை கூந்தலில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். பட்டுப்போன்று மென்மையான கூந்தல் கிடைக்கும்.


13. வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.