நரை முடி மறைய:


1. ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.


2. ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கி அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்து மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கி பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் நரை முடி பிரச்சினை குறையும்.


3. கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.


4. செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரைமணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்குவதுடன் வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.


இளநரை மறைய :


1. மருதாணி இலை, கைப்பிடி அளவு நெல்லிக்காய், 2 காபிக் கொட்டை, சிறிதளவு கொட்டைப் பாக்குப் பொடி 3 டீஸ்பூன் அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிட்டு காலையில் இந்த விழுதைக் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வந்தால் இளநரை மறையும்.


2. இரண்டு ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விட்டு தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். பின்பு ஆற வைத்து ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவி சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசினால் இளநரை மறையும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது.


3. மருதாணி இலை 3 ஸ்பூன், நெல்லிக்காய் பவுடர் 1 ஸ்பூன், காபி தூள் சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து வைத்து அந்த பேக்கை தலை முடியில் தடவி காயவிட வேண்டும். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசினால் இளநரை மறையும்.


4. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தால் இளநரை மறையும்.


5. மருதாணி இலையை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தய பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.