உலகம் முழுவதும் இன்று(08.03.2024) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 


கூகுள் டூடுல்:


சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல்  வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் ஓவியத்தை சோஃபி டியாவோ (Sophie Diao) என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருளாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் ('Invest in Women: Accelerate Progress) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு டூடுல், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான பெண்மணி என மூன்று தலைமுறையினரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மூன்று தலைமுறை பெண்களுன் அறிவு, முன்னேற்றத்தை ஒருவருக்கொருவர் பகிந்துகொள்வது அதன் ஏற்படும் வளர்ச்சி, மேம்பாடு குறித்து டூடுல் ஓவியத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜமக்காளம் போன்ற ‘Quilt' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், கல்வி, கலை, இலக்கியம், நீதி உள்ளிட்டவை குறித்து காட்சிப்படுத்தப்படுள்ளது.


மகளிர் தின வரலாறு:


சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. எனினும், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் 1848ஆம் ஆண்டு அடிமை எதிர்ப்புப் போராட்டங்களின் போது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டன.


அமெரிக்கப் பெண்களான எலிசபெத் கேடி ஸ்டேண்டன், லூக்ரீசிய மோர் நூற்றுக்கணக்கான மக்களோடு கூடி, பெண்களின் உரிமைக்காக மாநாடு நடத்தினர். 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு, பனிச்சூழல்களை எதிர்த்துப் போராடிய பின்னலாடை தொழிலாளிகளான பெண்களைக் கௌரவப்படுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.


1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையின் போது `உணவு, அமைதி’ ஆகியவற்றிற்காக போராடினர். இது கிரிகோரியன் நாள்காட்டியின்படி, ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 8 என்று கணக்கிடப்படும் நாளாக இருந்ததால், இந்த நாளின் சர்வதேச மகளிர் தினமாக காலப்போக்கில் அனுசரிக்கப்படத் தொடங்கியது. 


கருப்பொருள்:


2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் 'பெண்களில் முதலீடு செய்யுங்கள்' (Invests Womens) ஆகும். முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் என்பதே இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருள் ஆகும். பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்துவதும், அவர்களின் மதிப்பைப் புரிந்துகொள்வதும்  இதன் நோக்கமாகும்.