உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாட்களில் ஒன்றான புனித வெள்ளி நாளை (07.04.2023) அனுசரிக்கப்படுகிறது.


மற்ற பண்டிகைகளைப் போலல்லாமல், புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை குறிக்கும் துக்க நாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, மனிதகுலத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பின் அடையாளமாகவும், மக்களின் துன்பங்களை எளிதாக்க அவர் விரும்பியதாகவும் கருதப்படுகிறது. தவ காலத்தில் வரும் புனித வெள்ளி அன்று கிறித்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.


புனித வெள்ளி வரலாறு:


இயேசு கிறிஸ்துவை அவருடைய சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோட் என்பவர் 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை கொடுத்ததாக பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தன்னைக் கடவுளின் குமாரன் பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது  பைபிளின் படி, இயேசு தன்னை அறைய இருக்கும் சிலுவையை தானே சுமந்து சென்றார். பின்னர் அவர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் இயேசு கிறிஸ்து கைகள், மற்றும் கால்களில் ஆணிகள் அடிகப்பட்டு, அங்கேயே உயிரிழந்தார் எனப்படுகிறது


புனித வெள்ளி முக்கியத்துவம்:


கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுள் ஒன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று நம்பப்படுகிறது. பின்னர் அவர்கள் இரட்சிப்பின் பாதையில் செல்ல முடியும். எனவே, கிறிஸ்து செய்த தியாகங்களை நினைவுகூரும் நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த புனிதமான தினத்தில் மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். கிறித்துவ ஆலயங்களில் பிரார்த்தனை செய்வர்.


புனித வெள்ளி - முக்கிய உண்மைகள்:


புனித வெள்ளி மற்ற எந்த கிறிஸ்தவ பண்டிகை அல்லது விடுமுறை போல அல்ல.. ஹேப்பியான தினம் அல்ல. புனித வெள்ளி அன்று இயேசு பல துன்பங்களை அனுபவித்ததால் இயேசுவை பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களும், இயேசுவின் துன்பங்களை  நினைவு கூறும் வகையில் அன்றைய தினம் சாப்பிடாமல் இருந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அன்றைய தினம் முழுவதும் சிலுவைபாடுகளை நினைவுகூர்ந்து கருப்பு நிற உடையணிந்து கொள்வார்கள். இது கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நேரம் என்று கூறப்படுகிறது.


புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படும். மக்கள் நல்ல சிந்தனைகளுடன் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி ஏற்றுக்கொள்வர்.


இந்த புனித வெள்ளியை தொடர்ந்து, மூன்றாம் நாள் இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


ஈஸ்டர் சன்டே


‘Passion of Christ’, மற்றும் ‘ Passover’ என்றழைக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை, மக்கள் செய்த பாவங்களுக்காக, இயேசு தண்டனையை ஏற்றுக் கொண்டதாகவும், மனித குலம் வளர இயேசு தியாகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, இயேசு தன்னை வருத்திக் கொண்டு, மானுடம் செழிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தார் எனப்படுகிறது. மரணத்தை வென்ற இயேசுவை கொண்டாடும் தினமாக ஈஸ்டர் அமைந்திருக்கிறது.


ஈஸ்டர் முட்டை கூறும் தத்துவம் என்ன?


மூடிய கல்லறை திறந்து, வான் முழங்க, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றைய நாளில் இயேசு பிரான் உயிர்தெழுந்தார். அதுவே `ஈஸ்டர் திருநாள்' (Easter).


`பாஸ்கா' என்றால் `கடந்து போதல்' என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர் பெற்றார் என்பதால்`பாஸ்கா பண்டிகை' எனக் கொண்டாடப்படுகிறது.


ஈஸ்டர் சொல்லும் செய்தி என்னவென்றால், ’இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம். நம் பாவங்களை விட்டொழிப்போம். புதிய நல்வாழ்விற்கு தயாராவோம்.’ என்பதுதான்.


இயேசு பிரான் உயிர்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகை எனப்படுகிறது