ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


அடுத்தடுத்து விக்கெட்:


கொல்கத்தா அணி நிர்ணயித்த 205 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கோலி - டூப்ளெசிஸ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு அவர்கள் 44 ரன்கள் சேர்த்து இருந்தபோது,சுனில் நரைன் பந்துவீச்சில் கோலி கிளீன் போல்டானர். 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்களை சேர்த்து இருந்தார்.


அடுத்தடுத்து போல்ட்:
 
கோலியை தொடர்ந்து 23 ரன்கள் எடுத்து இருந்த டூப்ளெசி, 5 ரன்கள் எடுத்து இருந்த மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து, வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்டாகினர். அவர்களை தொடர்ந்து வந்த ஹர்ஷல் படேலும், சக்ரவர்த்தி பந்துவீச்சில் டக்-அவுட்டானார். தொடர்ந்து, ஷாபாஸ் அகமது ஒரு ரன்னிலும், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய  அனுஜ் ராவத் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கர்த்திக் 7 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தார். aடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் சரிந்த பெங்களூரு அணி இறுதிவரை மீளவே இல்லை.


கொல்கத்தா அபார வெற்றி:


இதனால் 17.4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்து  தோல்வியுற்றது. கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளையும் ,சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.  நடப்பு தொடரில் கொல்கத்தா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.


பெங்களூரு - கொல்கத்தா மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு  அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது. தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியோ பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை கண்டது. இதையடுத்து, வெற்றிப்பயணத்தை தொடர பெங்களூரு அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க கொல்கத்தா அணியும் முனைப்பு காட்டி இந்த போட்டியில் களமிறங்கின.


ஆரம்பமே சொதப்பல்:
 
கொல்கத்தா அணிக்காக குர்ப்ராஸ் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக விளையாடிய அந்த ஜோடி 26 ரன்களை சேர்த்தது. டேவிட் வில்லே நான்காவது ஓவரை வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வெங்கடேஷ் அய்யர் கிளீன் போல்டானார். இந்த போட்டியில் அவர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரை தொடர்ந்து வந்த மந்தீப் சிங்.முதல் பந்திலேயே நடையை கட்டினார். அவரை தொடர்ந்து கேப்டன் நிதிஷ் ராணாவும் வெறும் ஒரு ரன்னில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


மிரட்டிய குர்ப்ராஸ்:


மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்ள் சரிந்தாலும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்ப்ராஸ் பொறுப்புடன் விளையாடி கொல்கத்தாவை சரிவிலிருந்து மீட்டார். 39 பந்தில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.தொடர்ந்து 44 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து இருந்தபோது கரண் சர்மா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானர். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்க்ம். அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் டக்-அவுட் ஆனார்.


மிரட்டிய ஷர்தூல் தாக்கூர்


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.இதையடுத்து 6வது விக்கெட்டிற்கு ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் பெங்க்ளூருவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதரடித்தார். இதனால் வெறும் 20 பந்துகளில் ஷர்தூல் தாக்கூர் அரைசதம் கடந்தார். அவருக்கு உறுதுணையாக ரிங்கு சிங்கும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷர்தூல் தாக்கூர் - ரிங்கு சிங் ஜோடி, 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 46 ரன்களை எடுத்து இருந்தபோது கேட்ச் முறையில் ரிங்கு சிங் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து 29 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து இருந்தபோது, ஷர்தூல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை சேர்த்தது.