நாள்: 07.04.2023 - வெள்ளிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


மேஷம்


வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பயணங்களில் புதிய அறிமுகம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


மிதுனம்


குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் பிறக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.


கடகம்


குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.


சிம்மம்


அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் சேமிப்புகளை மேம்படுத்த முடியும். எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.


கன்னி


வாக்கு சாதுரியத்தின் மூலம் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் கருத்துகளை கூறும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். வரவுகள் நிறைந்த நாள்.


துலாம்


கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மாணவர்களுக்கு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் குறையும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் அலட்சியப்போக்கு இன்றி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.


தனுசு


உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சம வயதினரின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.


மகரம்


உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். கால்நடை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கவலைகள் குறையும் நாள்.


கும்பம்


எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேவை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.


மீனம்


எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். ஆரோக்கியமான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.