உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? அப்ப கூடவே எதை சாப்பிடலாம். எதை சாப்பிடக்கூடாது என்ற குழப்பமும் ஏற்படும். உங்களுக்கும் இருக்கலாம். அதுவும் சர்க்கரை நோயாளிகள் என்றால் என்ன மாதிரியான பழங்களைச் சாப்பிடலாம் என்பதில் பெரும் சந்தேகம் ஏற்படும்.


லைஃப்ஸ்டைலை மாற்றுங்கள்:


சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.


சர்க்கரை நோயும் பழங்களும்:


உண்மையில் சரியான இடைவெளியில் பழங்களை உட்கொண்டால் சர்க்கரை நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். ஒருநாளைக்கு 150 கிராம் பழங்களை மட்டுமே உண்ணலாம். 5 முதல் 12 ஆண்டு காலமாக உங்களுக்கு அன்றாடம் ஏதேனும் பழம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உங்களை சர்க்கரை நோய் தாக்குவதற்கான வாய்ப்பு 40% குறைவு.  


பழங்கள் எப்படி சர்க்கரை நோயைத் தடுக்கும்:


பழங்கள் எப்படி சர்க்கரை நோயைத் தடுக்கும் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பழங்கள் கலோரிக்கள் குறைவாகக் கொண்டிருக்கும். மேலும் அதில் நார்ச்சத்து அதிகம். அதனால், பழங்களை சரியான அளவில் உட்கொள்ளும் போது எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. பழங்கள் பயோஆக்டிவ் ஃபைட்டோகெமிக்கல்ஸ் உள்ளடக்கியவை. வைட்டமின் சி, கரோடினாய்டு, க்ளோரோஜெனிக் அமிலம் போன்றவற்றை கொண்டுள்ளது. இவை தான் சர்க்கரை ஏற்படாமல் தற்காக்கிறது.




 
என்ன வகையான பழங்களை சாப்பிடலாம்?


ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, வாழைப்பழம், ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ், செர்ரி வகைப் பழங்கள், பேரிக்காய் போன்றவை சர்க்கரை நோயாளிகள் உண்ணக் கூடியவை.


எந்த நேரத்தில் பழங்களை சாப்பிடலாம்?


உணவுக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் பழங்கள் செரிமானமாகாமல் போவதோடு கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கு கிடைக்காமல் போகும். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ப்ளர் தண்ணீருடன் பழத்தை சாப்பிடலாம். அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவோ, உணவு உண்டதற்கு இரண்டு மணி நேரத்துக்குப் பின்னரோ சாப்பிடலாம்.
 
பழச்சாறு அருந்தலாமா?


பழச்சாறு, கேனில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் அதிகளவு சர்க்கரை இருக்கும். அதனால், சர்க்கரை நோயாளிகள் இவற்றைத் தவிர்ப்பது நலம். பழச்சாரு அருந்தினால் சர்க்கரையின் அளவு உடனே அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி உணர்வையும் ஏற்படுத்தும்.


குறைந்த க்ளைசிமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள்..


சர்க்கரை நோயாளிகள் குறைந்த க்ளைசிமிக் இண்டக்ஸ் உள்ள பழங்களை உட்கொள்வது நலம். 


ஆப்பிள்: ஆப்பிள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பாலிஃபீனால் காம்பவுன்ட் கணையத்தில் சீரான இன்சுலின் சுரப்பை உறுதிப்படுத்தும்.


வாழைப்பழம்: இதில் கலோரிக்கள் அதிகம் என்றாலும் கூட வைட்டமின் சி, பொட்டாசியம், நுண்ணூட்டச் சத்துகள் அதிகம். பெரிய வாழைப்பழங்களை விட அளவில் சிறிய வாழைப்பழங்களை உண்பது நல்லது. 


பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்தும் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம். இதில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம்.
 
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, கிவி, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.


ஸ்ட்ராபெரி: ஸ்ட்ராபெரி குறைந்த க்ளைசிமிக் இன்டக்ஸ் கொண்ட பழம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.


செரி: செர்ரிப் பழம் குறைந்த க்ளைசிமிக் இண்டைஸ் கொண்டது.


மாம்பழங்கள்: மாம்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாது. ஒருவேளை ஆசைப்பட்டு சாப்பிட்டால் அத்துடன் அவித்த முட்டை, வெண்ணெய், உலர் கொட்டைகளையும் சேர்த்துக் கொண்டு 80 கிராமுக்கு மிகாமல் சாப்பிடலாம்.


மாதுளை: மாதுளையில் சர்க்கரை அளவு அதிகமென்றாலும் கூட இதில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம்.
 
கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.


அன்னாச்சிப் பழம், தர்பூசனி போன்றவற்றையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.


பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் கூட சிறுநீரக நோயாளிகள் தங்களின் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவற்றை சாப்பிடவே கூடாது.